மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?!
சென்னை: தமிழகத் தேர்தல் களம் இப்போது அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்திலேயே தேர்தல் முடிந்து.. வாக்குப் பெட்டிகள் லாக் ஆகிவிடும். ஆனால், இந்த முறை ஏப்ரல் 23-ம் தேதி வரை 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் வைக்கப்பட்டிருக்கிறது தமிழகம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய 'பணப் பாசம்' இருப்பதாக அரசியல் கழுகுகள் வட்டமிடுகின்றன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 (முதற்கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ. 5,000 தந்த 'திடீர்' இன்ப அதிர்ச்சி!
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, தமிழகத்து இல்லத்தரசிகளின் போன்களுக்கு ஒரு மெசேஜ் டக் டக் என வந்து விழுந்தது. 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்கான முன் பணம் மற்றும் கோடைகால சிறப்புத் தொகை என மொத்தம் ரூ. 5,000 ஒரே அடியாக வரவு வைக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் பணம் தருவதில் சிக்கல் வரும் என்பதால், முன்கூட்டியே இந்த மாஸ்டர் பிளானை அரங்கேற்றியது ஆளும் திமுக கட்சி.
எதிர்க்கட்சிகளின் 'ரிவெஞ்ச்' மூவ்?
"பணம் கொடுத்த சூடு ஆறுவதற்குள் தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சிக்கு அது சாதகமாகிவிடும்" என்பது தான் எதிர்க்கட்சிகளின் கணக்கு. இதற்காகத்தான் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தரப்பில், "பணம் கொடுத்த தாக்கம் மக்கள் மனதிலிருந்து குறையும் வரை தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்" எனத் தேர்தல் ஆணையத்திடம் ரகசியக் கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் மார்ச் 9-ம் தேதி இரண்டு மாதங்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
70 நாள் கணக்கு... எடுபடுமா?
இந்தத் தேர்தல் தேதியைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது:
தமிழ்நாடு: பிப்ரவரி 13-ல் பணம் வழங்கப்பட்டது. ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு. அதாவது, பணம் கைக்கு வந்து சரியாக 70 நாட்கள் கழித்துதான் மக்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்.
புதுச்சேரி: மார்ச் 9-ல் பணம் வழங்கப்பட்டது. அங்கே வாக்குப்பதிவு நடக்கும்போது சரியாக 27 நாட்கள் தான் ஆகியிருக்கும்.
"70 நாட்களில் அந்தப் பணத்தின் ஞாபகம் மக்கள் மனதில் இருக்குமா? அல்லது கோடை வெயிலோடு வெயிலாக அந்தப் பாசம் ஆவியாகிவிடுமா?" என்பதுதான் இப்போது அறிவாலயத்தின் கவலை. அதேநேரம், "புதுச்சேரியில் 27 நாட்களில் தேர்தல் நடப்பதால் அங்கே ஆளுங்கட்சிக்கு 'பாசிட்டிவ்' ஆக இருக்குமே?" என அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் முணுமுணுக்கின்றன.
மேற்கு வங்கத்தில் தேர்தல் கட்டங்களைக் குறைத்த ஆணையம், தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த 39 நாள் 'கேப்' விட்டது என்பதற்குப் பின்னால் இருக்கும் இந்த 'பொருளாதாரப் போர்' இப்போதுதான் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications