என்னங்க இது? நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 சீனியர் சிட்டிசன்ஸ்! தேர்வு உண்மையில் தரமானதா? குழப்புதே
சென்னை: தமிழ்நாட்டில் மூன்று மூத்த குடிமக்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு வந்த பின் மருத்துவ கல்வியில் கூடுதல் தரம் ஏற்படும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில்.. வயது முதிர்ந்த சீனியர் சிட்டிசன்கள் எம்பிபிஸ் படிப்பிற்கு தேர்வாகி இருப்பது விவாதங்களை விமர்சனங்களை சந்தித்துள்ளது.
நீட் தேர்வின் உண்மையின் நோக்கம் குறித்த கேள்வியையும் இந்த நிகழ்வு எழுப்பி உள்ளது. இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட 68, 67 மற்றும் 60 வயதுடைய மூன்று மூத்த குடிமக்கள் இந்த ஆண்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு இவர்கள் அரசுப் பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ச்சியில் அரசு தரப்பு
அரசுப் பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் அவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் மாநிலத் தேர்வுக் குழு உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 சீனியர் சிட்டிசன்கள் தேர்வில் வென்றது பாராட்ட கூடிய நிகழ்வு என்றாலும் கூட.. இளைஞர்கள் வர வேண்டிய இடத்திற்கு அவர்கள் தேர்வாகி இருப்பது தேர்வு மற்றும் அதன் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.
வயது வரம்பு இல்லை: எழும் கேள்விகள்
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) கடந்த 2022 ஆம் ஆண்டில் நீட் தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பை நீக்கியது. இது அனைத்து வயதினரும் மிகவும் போட்டித் தேர்வில் பங்கேற்க வழி வகுத்தது. மருத்துவக் கல்வியை எல்லோருக்கும் ஏற்றதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாற்றம், சமீபத்திய ஆண்டுகளில் வயதான விண்ணப்பதாரர்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
ஆனால் இதுவே தற்போது சிக்கலாக மாறி உள்ளது. ஏனென்றால் இது பொறியியல் போன்ற தேர்வு இல்லை. இது மருத்துவம். இதற்கு வயது முக்கியம். சீனியர் சிட்டிசன் ஒருவர் இனிமேல் மருத்துவம் படித்து துல்லியமாக மருத்துவ சேவை செய்வது கடினம். ஒவ்வொரு வருடமும் சீனியர் சிட்டிசன்களின் விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் பெற முயற்சி
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மூன்று மூத்த விண்ணப்பதாரர்களும் தமிழ்நாடு அரசின் 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இலவச எம்பிபிஎஸ் இடங்களை வழங்குகிறது.
வயதான நபர்கள் இந்த தேர்வை எழுதி எளிதாக வெற்றிபெறுவது.. இந்த தேர்வின் தரத்தையும், அதன் நோக்கத்தையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது.அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.
அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. இதையடுத்து பெரும் தாமதத்திற்கு பின் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த சட்டம் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் நீட் தேர்விற்கு எதிராக சட்ட போராட்டம் செய்வதுதான் ரகசியம் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் நீட் தேர்வில் 3 சீனியர் சிட்டிசன்கள் வென்று இருப்பது விவாதங்களையோ ஏற்படுத்தி உள்ளது.
இந்த வயதான விண்ணப்பதாரர்கள் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தாலும், அதிகாரிகள் இப்போது எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல் என்னவென்றால் இவர்களை வகுப்பில் சேர்ப்பது சரியாக இருக்குமா? அது சாத்தியமானதா? என்ற குழப்பம் நிலவுகிறது. மூத்த குடிமக்கள் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லை என்றாலும் அது எந்த அளவிற்கு செயல்முறை ரீதியாக சாத்தியமானது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications