தூக்கத்தை கெடுக்கும் அமுக்குவான் பேய்.. பின்னணி இதுதான்.. அறிவியலாளர்கள் சொல்லும் விளக்கத்தை கேளுங்க
சென்னை: மனிதர்கள் அனைவருக்கும் தூக்கம் என்பது அத்தியாவசியமாக இருக்கிறது. ஆனால் இந்த தூக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? என்று கேட்டால் கிடையாது என்றுதான் பதில் கிடைக்கிறது. அப்படி தூக்கத்தில் வரும் ஒரு முக்கியமான பிரச்னைதான் 'அமுக்குவான் பேய்' பிரச்னை. இது ஏன் உருவாகிறது? இதற்கு தீர்வு என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
மனித இனம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் நம்முடைய கற்பனைதான். ஆனால் இந்த கற்பனைகளே பெரும்பாலான மனிதர்களுக்கு பிரச்னையாக உருவாக்கியிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமான பாதிப்புதான் 'அமுக்குவான் பேய்' பிரச்னை.
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது திடீரென முழிப்பு வந்துவிடும். கண்கள் சட்டென திறந்து நம்மை சுற்றி என்ன இருக்கிறது? நாம் எங்கே இருக்கிறோம் என்பதை தேடும். அப்போது எதிர்பாராத விதமாக நமக்கு முன் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று இருப்பது போல தோன்றும். இடது மார்பின் மீது அது அமர்ந்திருப்பது போலவும், வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மூச்சு திணறல் வரை செல்லும். உடனடியாக அங்கிருந்து எழுந்திருக்க வேண்டும் என தோன்றும்.

ஆனால், கை, கால்கள் என எதையும் கொஞ்சம் கூட அசைக்க முடியாது. நேரம் நெருங்கிக்கொண்டே செல்லும். அந்த கருப்பு உருவம் நம்மை தொடுவதை நன்றாக உணர முடியும். அது முகத்திற்கு அருகே வருகிறது. அதன் மூச்சு மெல்ல நம் மீது படர்கிறது. ஒரு நொடி கண்ணை இறுக மூடிக்கொண்டு மெல்ல திறக்கிறோம். எல்லாம் மறைந்துவிட்டிருக்கிறது. கை, கால்களை அசைக்க முடிகிறது. உடனடியாக எழுந்து லைட்டை போடுகிறோம். நமக்கு நடந்தது என்ன என்பது குறித்து புரிந்துகொள்வதற்குள் அன்றாட வேலைகள் நம்மை ஓட வைத்துவிடுகிறது.
கண் முழித்தபோது நம்முன்னே வந்தது என்ன? ஏன் அது நம்மை அமுக்கியது? ஏன் இவ்வளவு கொடூரமாக நெருங்கியது? போன்ற கேள்விகள் காலம் முழுவதும் நமக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும். ஊரில் இதற்கு அமுக்குவான் பேய் என்று சொல்வார்கள். இது மற்ற பேய்களை போல நடு ராத்திரியில் வராமல் சூரிய உதயத்திற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்னர் வரும் என்றும் கூறுவார்கள்.
ஆனால் இதெல்லாம் உண்மையா? ஆய்வாளர்கள் இந்த கூற்றை மறுக்கின்றனர். மட்டுமல்லாது தூங்கும் போது இப்படி ஏற்படுவது ஒரு வகையான பிரச்னை என்றும் இதற்கு தூக்க பக்கவாதம் என அழைக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். நமக்கு தூக்கம் வருவது பிரச்னையாக இருக்கிறது. ஆனால் இந்த உலகத்தில் நன்றாக தூங்கும் 25 சதவிகிதமான மக்கள் இரண்டு வகையான தூக்க பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த தூக்க பக்கவாதம்.
நாம் அனைவரும் நினைப்பதை போல தூக்கம் ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. மனிதன் தூங்குவதால்தான் அவனுடைய முதுமை ஓரளவு தள்ளிப்போகிறது. தூக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு தோல் சுருக்கம் உள்ளிட்ட முதுமையின் அடையாளங்கள் சீக்கிரமாகவே தெரிந்துவிடும். அதேபோல தூக்கம் மனிதர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கிறது. தூக்கம் குறைவாக இருந்தால் அடுத்த நாள் உங்களால் சரியாக வேலைகளை செய்ய முடியாது.
இப்படியாக தூக்கம் மனித வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல, தூக்கம் 4 வகையாக பிரிக்கப்படுகிறது. இதில் 3வது நிலை ஆழ்ந்த தூக்கமாகும். இதை கடந்து REM எனப்படும் நான்காவது நிலைக்கு போகும்போதுதான் நாம் கனவு காண்கிறோம். தொடக்கத்தில் இந்த REM நிலையானது குறைந்த நேரம்தான் இருக்கும். இந்த நிலையில் நமது மூளை காபா மற்றும் கிளைசின் (GABA and glycine) என இரண்டு அமிலங்களை சுரக்கிறது. இந்த அமிலங்கள் நமது நரம்பு மண்டலத்தை சமநிலையில் வைத்திருக்கிறது.
அதாவது, நாம் கனவு காணும்போது அதை நிஜம் என்று நம்பி உடல்களை அசைத்துவிடக்கூடாது. எனவே நமது உடலை கட்டுப்படுத்த இந்த அமிலங்கள் பயன்படுகின்றன. இந்த அமிலங்கள் REM தூக்க நிலையில் மட்டுமே சுரக்கும். இப்படி இருக்கையில், திடீரென எதிர்பாராத விதமாக நாம் கண்விழித்துவிட்ட பின்னரும் கூட இந்த அமிலங்கள் சுரந்துக்கொண்டிருந்தால் நம்மால் பார்க்க மட்டுமே முடியும். மற்றபடி கை, கால், தலை என எதையும் அசைக்க முடியாது.
இதுதான் தூக்க பக்கவாதம் (sleep paralysis) என்று அழைக்கிறோம். உள்ளூர் மக்கள் இதை அமுக்குவான் பேய், அமுக்குவான் சைத்தான் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பிரச்னை இப்படிதான் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் ஏன் ஏற்படுகிறது? என்றும் இதற்கான தீர்வு என்ன என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேபோல இந்த பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நெஞ்சு மீது யாரோ ஏறி உட்கார்ந்திருப்பதை போன்று தோன்றும். இதற்கு காரணம் நுரையீரலுக்கு கீழே அமைந்திருக்கும் உதரவிதானம்தான். உடல் முழுமையான ஓய்வு நிலையில் இருக்கும்போது நாம் திடீரென கண் முழித்து பார்த்தால் மாய தோற்றங்கள் சில தெரியும். இருளில் உள்ள பொருட்களை மூளை அடையாளம் காண முயற்சிப்பதன் விளைவுதான் இது. இந்த பதட்டம் மூச்சை சீரற்ற நிலைக்கு மாற்றும் எனவேதான் நெஞ்சு பகுதியில் வலியும், மூச்சு திணறலும் ஏற்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications