Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக் அடிக்கும் இபி.. தமிழ்நாட்டில் உயர்கிறது மின்சார கட்டணம்? புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக அடுத்தடுத்த வருடங்களில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை.

கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டது.

Is the Tamil Nadu government to hike the Electricity tariff hike soon and What is the new price?

400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டது. 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டது. 600 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்பட்டது.

அப்போது இந்த மின் கட்டண உயர்வு சர்ச்சையான நிலையில், மத்திய அரசு கொடுத்த அழுத்தம்தான், மின்கட்டண உயர்விற்கு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருந்தார். அதில், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.

எரிசக்தி துறை அமைச்சகம் சார்பாக இந்த அழுத்தம் தரப்பட்டது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் அரசு மானியத்தை நிறுத்துவோம். நீங்கள் நிறுத்தவில்லை என்றால் மத்திய மின் துறை திட்டத்தை நாங்கள் உங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் 1 வருடமாக மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார்.

1 வருடமாக அவர் மின் கட்டணத்தை மாற்றாமல் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த மின்சாரத்துறை கூட்டத்தில் மத்திய அரசு எங்களிடம் அழுத்தம் கொடுத்தது. நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கண்டிப்பாக மானியம் தர மாட்டோம் என்றார். நான் இதன்பின் டெல்லி சென்று பேசிய போதும் எங்களிடம் கறாராக பேசினார்கள். மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்கள்.

28 முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. தனியார் மின் நிறுவனங்களுக்கும் இதற்காக கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதாவது மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசுக்கு நீங்கள் மின்சாரம் கொடுக்க கூடாது என்று மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துவிட்டது.

அந்த அளவிற்கு அவர்கள் பிரஷர் கொடுத்ததே மின்சார உயர்விற்கு காரணம். வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். மற்ற மாநிலங்களை விட குறைவாகவே மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூறி இருந்தார்.

மீண்டும் உயர்வு: இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக அடுத்தடுத்த வருடங்களில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை. ஜூலை 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

4.70 சதவிகிதம் அளவிற்கு மின் கட்டணம் உயரும். அதாவது நீங்கள் முன்பு 100 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தி வந்தீர்கள் என்றால் இனி 105 ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒரு யூனிட்டிற்கு 21 பைசாவில் இவர்ந்து 51 பைசாவாக கட்டணம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. இது தனி வீடுகளுக்கு.

Is the Tamil Nadu government to hike the Electricity tariff hike soon and What is the new price?

பொது அபார்ட்மெண்டில் உள்ள பொது கனெக்சன்களுக்கு 8 ரூபாயில் இருந்து 8.47 ரூபாய் அளவில் மின்சார கட்டணம் உயர்வு இருக்கலாம். அதேபோல் கிலோவாட் மின்சாரம் 200 ரூபாயில் இருந்து 208 ரூபாயாக உயரும். விலைவாசி உயர்வு, பணவீக்கம் காரணமாக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 1 கோடி மக்களுக்கு இந்த மின் கட்டண உயர்வால் பாதிப்பும் இதனால் இருக்காது. 42 விழுக்காடு மின் இணைப்புதாரர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பு இல்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மின்சார துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+