பாட்டில்களை துறக்க முடிவு.. டாஸ்மாக்கில் வரப்போகும் பெரிய புரட்சி.. அமைச்சர் முத்துசாமி அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளில் ஒன்று.

அதன்படியே அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று சட்டசபையில் கூறி இருந்தார். முதல் கட்டமாக 500 மதுபான கடைகளை குறைப்போம் என்று அவர் அறிவித்து இருந்தார்.
அதன்படி மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளைக் மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் இந்த கடைகள் தமிழ்நாடு முழுக்க மூடப்பட்டன. இந்த கடைகளை மூடுவதற்கு முன் அதற்காக லிஸ்ட் எடுக்கப்பட்டது. அதன்படி மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகள் லிஸ்ட் எடுக்கப்பட்டது. இந்த கடைகளை கண்டறியும் பணி நடத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வரும் டாஸ்மாக் கடைகளையும் கண்டறிந்தனர். பள்ளிகளுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக், கோவில்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் என்று பல்வேறு டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டன. இதற்கான லிஸ்ட் முதல்வர் ஸ்டாலினிடம் அனுப்பப்பட்டது.
டாஸ்மாக் மூடல்: அந்த லிஸ்ட் உறுதியான நிலையில் அது முதல்வர் ஸ்டாலினிடம் அனுப்பப்பட்டது. இதை உறுதி செய்த பின் சமீபத்தில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் 500 மூடப்பட்டன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது. கண்ணாடி பாட்டில்களை விட டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்றால் செலவு குறைவு என்பதால், அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கர்நாடகாவில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது.
கணினி முறை: நேற்று முதல்நாள்தான் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (டாஸ்மாக்) அதன் செயல்பாடுகளை எண்டு டூ எண்டு வரை கணினிமயமாக்க உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்கள் விரைவில் கணினி பில் பெறலாம். டாஸ்மாக்கை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பொதுத்துறையான ரெயில்டெல்லுக்கு 294 கோடி ஆர்டரை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஸ்டாக் இருக்கிறது, இல்லை, ஸ்டாக் வேண்டும் என்ற தகவல் தொடங்கி, டிஸ்டில்லரிகளில் இருந்து கடைகளுக்கு ஸ்டாக்கை கொண்டு செல்வது, விற்பனை பில் வரை அனைத்து பகுதிகளும் கணினிமயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூடல்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் 500 மூடப்பட்டு உள்ள நிலையில் முக்கியமான சோதனை ஒன்றை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி டாஸ்மாக் கடைகளில் தற்போது 1 மணி நேரத்திற்கு ஒரு முறை சர்வே எடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் ஒரு நாளுக்கு மூன்று முறை எவ்வளவு வருமானம் வந்தது என்று ரிப்போர்ட் அனுப்பப்படும்.
அதன்பின் கடைசியாக மொத்த விற்பனை எவ்வளவு என்றும் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்படும். ஆனால் இப்போது அது மாற்றப்பட்டு உள்ளது. இனி தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை எவ்வளவு வருமானம் வந்தது என்று ரிப்போர்ட் அனுப்பிவேண்டும். இதற்காக தாலுகா அளவில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரிப்போர்ட் லிஸ்ட் அப்படியே டாஸ்மாக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பின் முக்கிய காரணம் உள்ளதாம். குறைவாக வசூல் செய்யும் கடைகளை கண்டறிய முடியும். அதை மூட முடியும். அதோடு காலையில் டாஸ்மாக் பெரிதாக வசூல் கொடுக்கவில்லை என்றால், அது செயல்படும் நேரத்தை குறைக்க முடியும். இதை மனதில் வைத்தே மணி நேர கணக்கில் வருவாய் எவ்வளவு என்று சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications