Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாதம்.. முன்கூட்டியே வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை? அமைச்சர் தங்கம் தங்கமான தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விரைவில் நல்ல செய்தி சொல்ல போவதாக தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகையாவது முன்கூட்டியே வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

pongal 2023 pongal gift cm stalin bank account aadhar 2023 pongal news

பொங்கலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது,மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10ம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கப்படாத நிலையில்.. மகளிர் உரிமை தொகையாவது முன்கூட்டியே வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று விளக்கம் அளித்தார். இதில் மகளிர் உரிமை தொகை குறித்தும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. நல்ல சூழல் விரைவில் உருவாகும். அதற்கு முன் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

விரைவில் விரிவாக்கம்: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அரசு தரப்பில் இந்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மகளிர் உரிமை தொகை திட்டம் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் 1500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முன்னோடி தமிழக அரசுதான். ஆனால் தமிழ்நாட்டில் ரூ.1000 தான் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் 2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து.. எதிர்க்கட்சிகள் வழங்க போகும் வாக்குறுதிகளை மனதில் வைத்து ஆளும் திமுக அரசு தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் விரிவாக்கம்: மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதை பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது .

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+