Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் உடலை தீவுத் திடலுக்கு மாற்ற பிளான்.. அவசரமாக ஆலோசித்த பிரேமலதா! பின்னணியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுக்கடுங்காத கூட்டம் காரணமாக பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுவதால், தீவுத் திடலுக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Is there a plan to shift Vijayakanths body to general place?

விஜயகாந்த் உடல்: இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

கடுமையான நெரிசல்: அங்கு கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ, வணிக வளாகங்கள் என முக்கிய பகுதி என்பதால், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் முழுவதும் அப்பகுதியில் கூட்டத்தைச் சமாளிப்பது கடினம் எனக் கூறப்படுகிறது. இப்போதே, கடுமையான நெரிசலில் பலர் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளனர்.

இந்நிலையில் விஜயகாந்த் உடல் ராஜாஜி அரங்கத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், விஜயகாந்த் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்று அஞ்சலிக்கு வைக்கப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.

Is there a plan to shift Vijayakanths body to general place?

அரசு மரியாதை: முன்னதாக, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பொது இடத்தில் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்யும் கோரிக்கை மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இடம் மாற்றம்: அதேநேரம், ராஜாஜி ஹாலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடலை அங்கு வைப்பதில் சிரமம் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைத்து அங்கேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படியே, வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டு விஜயகாந்த் உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

எனினும், கோயம்பேடு பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகின்றன. கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியாத சூழல் நிலவுவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருப்பதால், தீவுத் திடலுக்கு விஜயகாந்த் உடலை இடமாற்றுவது குறித்து பிரேமலதா விஜயகாந்திடம் அரசு தரப்பில் பேசப்பட்டுள்ளது.

தீவுத் திடலுக்கு மாற்றம்: இந்நிலையில், விஜயகாந்த் உடலை இடமாற்றம் செய்வது குறித்து, தனது உறவினர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசித்தார். இட நெருக்கடி காரணமாக, விஜயகாந்த் உடலை தீவுத்திடலுக்கு கொண்டு சென்று அஞ்சலிக்கு வைத்து, என்றும் நாளை பிற்பகல் வரை அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இட நெருக்கடியை கருத்தில் கொண்டு விஜயகாந்த் உடல் மாற்றப்பட உள்ளது. வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருவதால், கோயம்பேடு பகுதியில் கடுமையான சிக்கல் ஏற்படும் என்பதால் மாற்றப்படுகிறது. அதிகாலை 6 மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து விஜயகாந்த்தின் உடல் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

பிற்பகல் வரை அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அதன்பிறகு 1 மணியளவில் பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாலை 4.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அதிகாலையில் விஜயகாந்த் உடல் மாற்றப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+