பொங்கல் பண்டிகை ஹாலிடே ஓவர்! அடுத்தது பிப்ரவரியில் தொடர் விடுமுறை எப்போது?
சென்னை: பொங்கல் விடுமுறை இன்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்த தொடர் விடுமுறை எப்போது என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொண்டது.
இதனால் தற்போது காலண்டரை புரட்டத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு பலர் சென்று வருகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களிலும் இவர்கள் செல்கிறார்கள்.

அதிலும் லாங் வீக் எண்ட் வந்துவிட்டால் சின்ராஜை கைலயே பிடிக்க முடியாது என்பதை போல் அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் , ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோரையும் கையிலேயே பிடிக்க முடியாது என சொல்லலாம்.
அந்த அளவுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லவும் சுற்றுலா செல்லவும் திட்டமிடுவார்கள். கடந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையும் இப்படித்தான் வீக் எண்ட்டிற்கு பிறகு வந்ததால் தொடர் விடுமுறை கிடைத்தது. அது போல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையும் அப்படித்தான்.
பொங்கல் பண்டிகை 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து 15 ஆம் தேதி மாட்டு பொங்கல், 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 13 ஆம் தேதி போகி பண்டிகை என கொண்டாடப்பட்டது. இதனால் 11, 12 சனி, ஞாயிறு விடுமுறையாகும்.
இதனால் பொங்கலுக்கு 11, 12, 13, 14, 15, 16 என 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. மேலும் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விடுமாறு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் 17ஆம் தேதியும் விடுமுறை என்பதால் 18, 19 சனி, ஞாயிறு என சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
இதனால் மக்கள் சொந்த ஊர்களிலும் சுற்றுலா தலங்களிலும் ஆன்மீக தலங்களிலும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த நிலையில் இன்று வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அடுத்த தொடர் விடுமுறை எப்போது என பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த வகையில் ஜனவரி 26ஆம் தேதி திங்கள்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வராமல் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டதால் ஐயோ என கடுப்பாகிவிட்டார்கள். அடுத்த மாதம் பிப்ரவரி மாத காலண்டரை பார்த்ததும் குஷியாகிவிட்டார்கள்.
ஆம் அடுத்த மாதம் தைப்பூசம் அன்று அரசு விடுமுறை. அது செவ்வாய்க்கிழமை வருகிறது. எனவே திங்கள்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டால் போதும் சொளையாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
இதை விட்டால் அத்துடன் மார்ச், ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். எனவே மே மாதம்தான் சொந்த ஊர்களுக்கோ சுற்றுலா செல்லவோ திட்டமிட முடியும். இதனால் இந்த தைப்பூச விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க பலர் திட்டமிட்டு வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications