சென்னையில் மேக வெடிப்பு? வெறும் 1 மணி நேரத்தில் நடந்த திடுக் சம்பவம்.. ரொம்ப ஷாக்கிங்கா இருக்கே!
சென்னை: இன்று சென்னை ஆலந்தூரில் பெய்த மழையை கிளவுட் பர்ஸ்ட் என்று அழைப்பது சரியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். வானிலை ஆர்வலர்கள் பலரும் ஆலந்தூரில் மிக அதிக அளவில் மழை பெய்ததாக கூறியுள்ளனர், இதை தமிழில் மேகவெடிப்பு என்று கூறுவார்கள்
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.

ஆலந்தூரில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆலந்தூரில் ஒரு மணி நேரத்திற்குள் 85 மிமீ மழை பெய்துள்ளது. ஆலந்தூரில் உக்கிரமான மழை பெய்து இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. இங்கே தண்ணீர் தேங்கிய பகுதிகளின் வீடியோ ஒன்றையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
ஆலந்தூரில் பெய்த மழையை கிளவுட் பர்ஸ்ட் என்று அழைப்பது சரியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். இதை தமிழில் மேகவெடிப்பு என்று கூறுவார்கள். ஆனால் இதை அப்படியே பொருள் கொள்ள கூடாது.
மேகவெடிப்பு என்றால் என்ன?; மேகம் என்பதை தண்ணீர் நிரம்பிய பலூன் போல கருதி வெடிப்பதாக நினைத்தே முன்பு இந்த பெயர் வைக்கப்பட்டது. ஆனால் வானிலை உலகம் இது உண்மை இல்லை என்று உறுதி செய்துவிட்டது. மாறாக மேக வெடிப்பு என்பது கனமான மழை நீரை கொண்ட மேகங்கள் ஒரே நொடியில் மொத்தமாக தண்ணீராக மாறும் நிலை ஆகும்.
அதாவது கனமான மழை நீர் கொண்ட மேகம் நமக்கு மேலே இருக்கிறது என்று வைத்துகொள்வோம். இதை சுற்றி குளிர்காற்று இருக்கும் போது, பூமியில் இருந்து மேலே செல்லும் வெப்ப காற்று இந்த குளிர் காற்றோடு உரசும். இந்த வெப்ப காற்றும், குளிர் காற்றும் இணைவதால் திடீரென condensation ஆகும். அதாவது வாயுப்பொருள் திடீர் திரவ பொருளாக மாறுவது ஆகும்.
இப்படி குளிர் காற்றும், சூடான காற்றும் இணைந்து திடீரென மேகத்தை திரவமாக மாற்றும். இதன் காரணமாக ஏற்படும் மழைதான் மேக வெடிப்பு அல்லது கிளவுட் பர்ஸ்ட். 20-30 சதுர கி.மீ பரப்பளவில் எதிர்பாராத விதமாக 100 மி.மீ மழை 1 மணிநேரத்திற்கு மேல் பெய்தால் அதை இப்படி அழைப்பார்கள். சென்னையில் இன்று காலை இப்படித்தான் பல இடங்களில் 1 மணிநேரத்திற்குள் கிட்டத்தட்ட 100 மிமீ வரை மழை பெய்துள்ளது.
முக்கியமாக ஆலந்தூரில் 100 மிமீ வரை அதிகாலையில் மழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் பெய்தது மேக வெடிப்பு மழையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆலந்தூரில் பெய்த மழை மேக வெடிப்பாக இருக்குமோ என்று கருதப்படுகிறது. ஆனால் வானிலை மையம் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications