Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தலைவலி’.. பழசு எல்லாம் வந்து போகுமா இல்லையா? பாஜக ‘டாப்’ தலைமை போடும் கணக்கு.. மீண்டும் சம்பவமா?

மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை களமிறக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பது உறுதியான நிலைப்பாடு அல்ல, தந்திர நடவடிக்கைதான் என்ற பார்வையை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். அதிமுக ஒற்றைத் தலைமையோடு வலிமையாக இருந்தால் தங்கள் கையை மீறிப் போய்விடும் என உணர்ந்திருக்கும் பாஜக தலைமை, ஈபிஎஸ்ஸை நிரந்தரமாக ஆதரிக்கும் முடிவை நிச்சயம் எடுக்காது என்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடாகவே பாஜக ஈபிஎஸ்ஸை ஆதரித்திருக்கிறது என்றும், தேர்தல் முடிந்தபிறகு ஓபிஎஸ் மீண்டும் களத்தில் இறக்கப்படுவார் என்கிறார்கள்.

அதற்கேற்பவே, பின்னடைவைச் சந்தித்ததாக கருதப்படும் ஓபிஎஸ் சமீபத்தில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த தர்ம யுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.

 அதிமுக பலம் - பாஜகவுக்கு சவால்

அதிமுக பலம் - பாஜகவுக்கு சவால்

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை இருப்பது பாஜகவுக்கு தலைவலி தான் என்ற நிலை இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆதரவு கொடுத்த ஜெயலலிதாவே பாஜக ஆட்சியைக் கவிழ்த்தது கடந்த கால வரலாறு. மேலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் மோடியா? லேடியா? என முழங்கி, தனது பலத்தை நிரூபித்தார் ஜெயலலிதா. எனவே, அதிமுகவின் ஒற்றைத் தலைமை தங்களுக்கு சவால் விடக்கூடியது என்பதை பிரதமர் மோடி உணர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாஜக விரும்பவில்லை

பாஜக விரும்பவில்லை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விகே சசிகலா, பெரும் பலத்தோடு எழுந்த நிலையில், ஜெ.வை போல வலிமையான நிலையை சசிகலாவும் எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போது சசிகலா முதல்வராக முடியாமல் அவர் சிறைக்குச் செல்ல நேரிட்டதும், டிடிவி தினகரன் பாஜக அரசால் தொடர்ச்சியாகக் குறிவைக்கப்பட்டதும் தற்செயல் நிகழ்வு என்று எடுத்துக்கொள்ள முடியாது, இதற்குப் பின்னணியில், அதிமுக பலத்தோடு இருப்பதை பாஜக தலைமை விரும்பவில்லை, ஏதோவொரு பலவீனத்தோடு தங்கள் கைக்குள் இருப்பதையே பாஜக தலைமை விரும்புவது தெளிவாகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜக ஆதரவு

பாஜக ஆதரவு

அப்படி இருக்கும்போது, தற்போது எடப்பாடி பழனிசாமியை மட்டும் ஒற்றைத் தலைமையாக பாஜக தலைமை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பும் வேட்பாளரை அறிவித்த நிலையில், யாருக்கு தங்கள் ஆதரவு என பாஜக அறிவிக்காமல் இழுத்தடித்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தென்னரசு, அதிமுகவின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால், ஓபிஎஸ் பின்வாங்கினார். அதன் பிறகுதான் பாஜக, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது.

தற்காலிக முடிவுதான்

தற்காலிக முடிவுதான்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். இதனால், பாஜக, ஓபிஎஸ்ஸை கைவிட்டு விட்டதாக பேச்சுகள் எழுந்தன. இனி ஓபிஎஸ்ஸால் எடப்பாடியை வலிமையாக எதிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பேரிடியாக அமைந்தது. ஆனால், பாஜகவின் இந்த ஈபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு என்பது தற்காலிகமானது தான், இடைத்தேர்தல் முடிந்தபிறகு, மீண்டும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும், எடப்பாடி பழனிசாமி அசுர பலத்தோடு அதிமுகவுக்கு தலைமை தாங்குவதை பாஜக விரும்பாது என்கிறார்கள்.

எடப்பாடி பெயரே வரலையே

எடப்பாடி பெயரே வரலையே

அதற்குச் சான்றாக, அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி பெயரை எங்குமே உச்சரிக்கவில்லை. அண்ணாமலை உடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரமும் மேற்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது பாஜக நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை, பாஜக கொடிகளும் பிரச்சாரக் களத்தில் தென்படவில்லை. கூட்டணியில் இருந்தாலும், இரு கட்சிகளும் பிரிந்தே நிற்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் சொன்ன மேட்டர்

ஓபிஎஸ் சொன்ன மேட்டர்

மேலும், கடந்த 20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் நடத்திய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, மேடையில் பேசும் முக்கிய நிர்வாகிகளுடன் தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ஓபிஎஸ். அப்போது, பாஜகவை தாக்கியோ, அண்ணாமலையை விமர்சித்தோ யாரும் பேச வேண்டாம் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு சார்பாக செயல்படுவதாக ஓபிஎஸ் அணியினர் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில், 20ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் யாருமே பாஜக, அண்ணாமலை பற்றி பேச்சே எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டுமென்றால், ஈபிஎஸ்ஸை ஒற்றைத் தலைமையாக அங்கீகரிக்கக் கூடாது, அதிமுக பஞ்சாயத்து தங்கள் வசமே இருக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறதாம் பாஜக தலைமை. 2024 எம்பி தேர்தலின்போது தங்கள் விருப்பப்படி அதிக சீட் பெற வேண்டுமானால், ஈபிஎஸ்ஸை கைக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும், அந்த பிடியை விட்டுவிட்டால் எடப்பாடி பழனிசாமி தங்களை மீறிச் சென்றுவிடுவார் என்பதால், இப்போது இடைத்தேர்தலில் ஆதரித்து, கூட்டணியை தக்க வைத்துள்ளது என்றும், இடைத்தேர்தல் முடிந்தபிறகு, ஓபிஎஸ்ஸை களமிறக்கி, மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தலைமை குடைச்சல் கொடுக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+