பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய, விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன? மத்திய அரசு சரியான விளக்கம்
சென்னை: பிறப்புச் சான்றிதழ் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அதுகுறித்து தெளிவான விளக்கத்தை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.. மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான PIB Fact Check இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.. என்ன நடந்தது?
பிறப்பு சான்றிதழ் அனைவருக்குமே கட்டாயம் தேவைப்படும் ஒரு அரசு ஆவணமாகும்.. . ஸ்கூலில் குழந்தைகளை சேர்ப்பது முதல் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, அரசு உதவி திட்டங்கள் பெறுவது உட்பட எதுவாக இருந்தாலும் சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.. அந்த ஆவணங்களில் மிக மிக முக்கியமான ஆவணமாக இருப்பது இந்த பிறப்புச் சான்றிதழ்தான்..

பிறப்புச் சான்றிதழ் காலக்கெடு நிர்ணயம்?
இவ்வளவு முக்கியம் வாய்ந்த சான்றிதழ் என்பதால்தான், அதில் தவறுகள், பிழைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்கிறார்கள்.. ஒருவேளை சான்றிதழில் தகவல்கள் தவறாக இருந்தால், அதில் மாற்றங்களை செய்து கொள்வதற்கும் அல்லது பிறப்புச் சான்றிதழை பெறுவதற்கும் அல்லது அதை புதுப்பிப்பதற்கும் அரசாங்கமே காலக்கெடுவை நிர்ணயிக்கும்..
மத்திய அரசு விளக்கம்
ஆனால், கடந்த சில நாட்களாகவே, சோஷியல்மீடியாவிலும், வாட்ஸ்அப் குரூப்களிலும், ஒரு தகவல் வேகமாக பரவியது.. அதாவது, "பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் ஏப்ரல் 27, 2026க்குள் பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும். அதற்குப் பிறகு பதிவு செய்ய முடியாது" என்று அந்த தகவல் பரவியது.
இதைப்பார்த்த பலரும், பதற்றமாகி விட்டனர்.. சிலர், சான்றிதழை திருத்துவதில் அவசரம் காட்ட துவங்கினர்.. இந்நிலையில்தான், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.. மத்திய அரசின் PIB Fact Check எனப்படும் உண்மை சரிபார்ப்புப் பிரிவானது, இதுகுறித்து தெளிவான விளக்கத்தையும் தந்துள்ளது..
பிறந்த இடத்தில் பதிவு
அதில், "பிறப்புச் சான்றிதழுக்காக எந்த ஒரு இறுதி தேதியையும் அல்லது காலக்கெடுவையும் அரசு நிர்ணயிக்கவில்லை.. சமூக ஊடகங்களில் பரவும் இந்த செய்தி போலியானது.. கடந்த ஆகஸ்ட் 2023ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம்" தொடர்பான செய்திகளை மையமாக கொண்டு இந்த தகவல் பரப்பப்படுகிறது.
திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அனைத்துப் பிறப்புகள் மற்றும் இறப்புகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அரசு எந்த கடைசி நாளையும் அறிவிக்கவில்லை. பிறந்த இடத்திலேயே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை மட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.
அதேபோல், பிறப்பு சான்றிதழில் பெயர், தேதி போன்ற விவரங்களில் பிழை இருந்தால் அதைத் திருத்துவதற்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
பொதுமக்கள் நிம்மதி
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை உடனே நம்ப வேண்டாம். அரசு சார்பில் வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். தவறான செய்திகள் மக்கள் மனதில் தேவையில்லாத பயத்தை உருவாக்குகிறது..
தேவையானவர்கள் வழக்கமான நடைமுறையின் படி விண்ணப்பித்து சான்றிதழைப் பெறலாம். எந்த மாற்றங்களும் ஏற்பட்டால், அது அரசு அறிவிப்பின் மூலம் மக்களுக்கு நேரடியாக தெரிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விளக்கமானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications