இதுதான் உங்க லட்சணமா? 2 எம்எல்ஏக்களுக்கு போனை போட்டு திட்டிய ராமதாஸ்.. அப்படி என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் 2 பாமக எம்.எல்.ஏ.க்களை போன் செய்து கோபமாக திட்டியதாக கூறப்படுகிறது.

கடலூரில் விவசாய நிலங்களை என்எல்சி கையகப்படுத்துவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முதல் சுரங்கத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இரண்டாவது சுரங்கத்திற்கு நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இந்த விவகாரத்தில் பாமக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Is this your attitude? PMK founder Ramadoss calls and shouts at his MLAs

இந்த என்எல்சி விவரம் தொடர்பாக பாமக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. அந்த நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பரப்புரை தீவிரம் அடைந்திருப்பதாலும் அது சாத்தியமாகவில்லை.

Is this your attitude? PMK founder Ramadoss calls and shouts at his MLAs

இந்த நிலையில், 2000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 30&க்கும் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளை கருவில் கொல்வதற்கு இணையாக கொடுமையாகும், என்று கூறி உள்ளனர்.

பாமக எம்எல்ஏக்கள்: இந்த என்எல்சி விவகாரத்திற்கு இடையில்தான் 2 பாமக எம்.எல்.ஏ.க்களை கடிந்து கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். சேலம் மாவட்டத்தில் பாமகவுக்கு சதாசிவம், அருள் என 2 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இதில், சதாசிவம் என்பவர் சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த சதாசிவம், "அதிகாரிகள் கமிசன் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டனர். உயரதிகாரிகள் இதனை விசாரிக்க வேண்டும் " என்று தனது லெட்டர் ஹெட்டினை நோட்டீஸ் போல பாவித்து ஒட்டியிருக்கிறார்.

இதனால் சிறிது நேரத்தில் அங்கு பரபரப்பு உருவானது. இதனைக் கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த பாமகவின் மற்றொரு எம்.எல்.ஏ.வான அருள், அந்த நோட்டீஸை கிழித்து அப்புறப்படுத்தினார். இந்த இரு சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 2 எம்.எல்.ஏ.க்களும் ஃபோனில் பேசி தனது அதிர்ச்சியை தெரிவித்துக்கொண்டார் டாக்டர் ராமதாஸ்.

இந்த நிலையில், இந்த சம்பவம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ஆகியோரின் கவனத்துக்குச் சென்ற நிலையில், 2 எம்.எல்.ஏ.க்களையும் தொடர்புகொண்டு, " இது தான் நீங்கள் மக்கள் பணிகளை கவனிக்கிற லட்சணமா.. பொது இடத்தில் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? உங்களுக்கு இடையில் பிரச்சனை இருந்தால் இப்படித்தான் வெளியே வெளிச்சம் போட்டு காட்டுவீர்களா? " என்று வறுத்து எடுத்துவிட்டார் ராமதாஸ் என்கிறார்கள் பாமகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+