திமுகவுக்கு சில்லு சில்லாக நொறுங்குது! திருமாவை வைத்து எடப்பாடி போடும் பிளான்.. குறுக்கே வரும் விஜய்
சென்னை: திமுக கூட்டணியை உடைக்க விஜய், எடப்பாடி பழனிசாமி என்று இருவரும் களத்தில் இறங்கி உள்ளார்களாம். இதற்காக தீவிரமான ரகசிய பேச்சுவார்த்தைகளையும் கூட அவர்கள் நடத்த தொடங்கி விட்டனராம்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை செய்யப்பட்டது.

தற்போது சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருமா கருத்து: இந்த விவகாரத்தில் திருமா மிகவும் காட்டமாக பேசி உள்ளார். அதில், ‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்.
அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். சாமானியன் முதல் தவைர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமையாகும். இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்; வரும் காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. அவரது கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை என்று கூறி உள்ளார்.
எடப்பாடி பிளான்: இந்த நிலையில்தான் திமுக - விசிக இடையே உள்ள இந்த விரிசலை பயன்படுத்தி திருமாவை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விவகாரம் , சில அமைச்சர்கள் விவகாரம் என்று பல விஷயங்களில் திருமா - திமுக இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது உள்ள விரிசலை பயன்படுத்தி விசிகவை அதிமுக கூட்டணிக்கு இழுக்க தீவிரமான முயற்சிகளை எடப்பாடி எடுத்து வருகிறாராம்.
குறுக்கே வந்த விஜய்: ஆனால் அதிமுகவின் இந்த பிளானிற்கு விஜய் குறுக்கே இருப்பார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் விஜய் விசிகவை இழுக்க முயன்று வருகிறாராம். திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் அவர்களின் கூட்டணி. காங்கிரஸ் 10 சதவிகித வாக்குகள் மற்ற கட்சிகள் 2-5 சதவிகித வாக்குகள் வென்றது திமுகவின் வெற்றிக்கு பெரிய காரணம் ஆகும்.
இதைத்தான் ஆட்ட விஜய் முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஆளும் திமுகவின் அஸ்திவாரத்தை அசைக்க போகும் முக்கியமான திட்டம் ஒன்றை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் செய்ய உள்ளதாம். இதற்கான ஆலோசனைகளை அவர்கள் நடத்தி வருகிறார்களாம்.
அதன்படி நடிகர் விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வருவதே அவரின் திட்டம் என்கிறார்கள். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்களை இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேரலாம்.
அதனால் பாஜக மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவையும் இந்த கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் விஜய்க்கு அப்படி ஒரு பிம்பம் இல்லை. அவர் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை.
இதனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் இன்னும் அவர்கள் ஓகே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் கூட்டணி காட்சிகள் மாறலாம்.
தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை விட திமுக கூட்டணியை உடைப்பதே விஜய்யின் முக்கிய திட்டம் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications