Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 மாங்காய்".. வன்னியரசு போட்ட போடு.. "உங்களை கன்ட்ரோலே பண்ண முடியலயே".. திமுகவுக்கு செம குஷி

விசிக வன்னியரசு, சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து ட்விட்களை பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் ஆன்மீக அரசியல் குறித்து விசிக கருத்து சொல்லி உள்ளது.. அதுகுறித்து வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட்கள் குறித்தும் விவாதங்கள் வெடித்து வருகின்றன.

கடந்த சில தினங்களாகவே, சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தலைதூக்கி உள்ளது.. இக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

அதனை விசாரிக்க அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்றும், நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டு இருந்தது.

 தீட்சிதர்கள்

தீட்சிதர்கள்

அப்படியெல்லாம் விசாரிக்க கூடாது என்று தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட தீட்சிதர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையும் நடத்தினார்.. இதுகுறித்து சுமூக முடிவையும் எடுத்து வருகிறார்.. இதெல்லாம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இந்த விவகாரத்தில் விசிக திடீரென என்ட்ரி தந்துள்ளது.. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, அடுத்தடுத்து ட்வீட்களை பதிவிட்டு, பாஜகவை திணறடித்துள்ளார்.. அந்த ட்வீட்கள் இவைகள்தான்

 உண்டியல் வசூல்

உண்டியல் வசூல்

"சிறந்த பக்திமான் மட்டுமல்ல, ஆன்மீகவாதியும் கூட மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள். இந்து மதத்தை அல்ல.. அறநிலையத்துறையை சீர்திருத்தம் செய்யவே 'செயல்பாபு'வாக செயல்பட்டு வருகிறார். இப்படியான 'இந்து'ஆன்மீகவாதியையே தீட்சிதர்கள் மதிக்கவில்லை என்றால், எந்த இந்துவை மதிக்கப் போகிறார்கள்? ஏக்கரில் நடராசர் கோவிலும் 2,700ஏக்கர் நிலப்பரப்பும் தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.பல கோடி மதிப்புள்ள நகைகள், உண்டியல் வசூல் என கொள்ளையடித்து வருகிறார்கள் சிதம்பரம் தீட்சிதர்கள்.

 தாழ்த்தப்பட்டோர்

தாழ்த்தப்பட்டோர்


அப்பாவி இந்துக்களே இச்சொத்தில் உங்களுக்கு உரிமை இல்லையா? அரசு கணக்கு கேட்பது தவறா? கனகசபை மீதேறியதற்காக சாதியைச் சொல்லி இழிவுபடுத்திய 20 தீட்சிதர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கடந்த 13.2.2022 ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதுவரை கைது செய்யப்படவில்லை.
தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட சமூகவிரோத தீட்சதர்களை கைது செய்ய வேண்டும்.

 2 மாங்காய்கள்

2 மாங்காய்கள்

தமிழ்நாடு எல்லைக்குள் வாழ்வோர் அரசின் சட்ட-திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களே. சிதம்பரம் நடராசர் கோவிலை நிர்வகிக்கும் #தீட்சிதர்கள் மட்டும் அரசாங்கத்துக்கு கட்டுப்படாமல் அரம்பத்தனம் செய்வதேன்? கோவில் வருமானம் பொதுமக்கள் பணம்தானே? தீட்சதர்கள் கணக்கு காட்டமாட்டார்களா? என்று அடுக்கடுகக்க கேள்வி கேட்டுள்ளார்.. இந்த அனைத்து ட்வீட்களிலும் அமைச்சர் சேகர்பாபுக்கு டேக் செய்துள்ளார்.. வன்னியரசு இப்படி ட்வீட் போட்டு, 2 மாங்காய்களை அடித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

முதலாவது, சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் பாஜகவை சரமாரியாக கேட்டுள்ளார்.. இதைதான், நேற்றைய தினம் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் கேட்டிருந்தார்.. "கோயிலில் அறநிலைத்துறை கொள்ளையடிக்கிறது. அங்கு தவறு நடக்கிறது என்பதெல்லாம் வரம்பு மீறிய பேச்சு.. ஒரு கோவில் எப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாக முடியும்? அது மக்களுக்கு தானே சொந்தம்? சிதம்பர நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாடில் கொண்டு வர வேண்டும்.. ஆதீனங்கள் ஆன்மீக பணியை மட்டும் தான் செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு, ஆதீனங்கள் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கக்கூடாது" என்று சற்று காட்டமாகவே கூறியிருந்தார்.

 திருமாவளவன்

திருமாவளவன்

இதைதான் விசிகவும் இன்று கேட்டுள்ளது.. அந்த வகையில் திமுக அரசு எடுக்கும் நடவடிக்கை சரியானதே என்பதை விசிக ட்வீட் போட்டு வலியுறுத்தியுள்ளது.. மற்றொரு பக்கம், ஆன்மீக அரசு என்ற விமர்சனம், திமுக மீது எழாத வண்ணமும் கருத்துக்களை சொல்லி வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு அதாவது பட்டினப்பிரவேச விவகாரம் தலைதூக்கியிருந்த சமயம், அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள், "பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி தந்துவிட்டீர்களே" என்று கேட்டிருந்தனர்.

 ஸ்டாலின் பேட்டி

ஸ்டாலின் பேட்டி

அதற்கு சேகர்பாபு, இது ஆன்மீக அரசு.. ஆன்மீக அரசு என்பதைவிட யாருக்கும் அடிபணியாத அரசு என்று பதிலளித்திருந்தார்... அதுமட்டுமல்ல, "தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசு ஆன்மீக அரசுதான் என தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் பாராட்டியுள்ளனர்" என்று முதல்வர் ஸ்டாலினும் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். இதையடுத்து, இதே கேள்வியை, விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.. ஆன்மீக அரசு என்று முதல்வர்சொல்கிறாரே? இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர்..

 திருமா பதிலடி

திருமா பதிலடி

அதற்கு திருமாவளவன், "இது ஆன்மீக அரசும்கூடதான்" என்று முதல்வர் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.. ஏனென்றால், கட்சியின் நிலைப்பாடு வேறு, அரசின் நிலைப்பாடு வேறு.. ஒரு கட்சியின் நிலைப்பாட்டை, எல்லா நேரங்களிலும் நடைமுறைப்படுத்தி, பொருத்திப்பார்க்க முடியாது.. அரசு என்பது அனைத்து தரப்புக்குமானது.. அனைத்து தரப்புக்கும் நம்பிக்கை அளிக்க கூடியது.. அந்த வகையில், பாஜக, சங் பரிவார், மதவாத அரசியலை கையில் எடுத்து, இங்கே தொடர்ந்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.. அதன்மூலம் காலூன்ற துடிக்கிறார்கள்.. அவர்களின் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில், முதல்வர் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

 வன்னியரசு

வன்னியரசு

அதாவது, திமுக மேற்கொண்டு வரும் அரசியலை, சிலர் விமர்சித்து வருகிறார்கள்.. "அந்த பயம் இருக்கட்டும்" என்று பாஜகவுக்கு பணிந்துவிட்டதாகவே கருத்துக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.. கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளையும் சிலர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், எந்தவிதமான சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல், திமுகவின் அறநிலையத்துறை நடவடிக்கையை விசிக தொடர்ந்து பாராட்டி வருவதுடன், தோழமை கட்சி என்ற ஸ்தானத்தையும் விட்டுக் கொடுக்காமல், திமுகவுக்கு ஆதரவு தந்து வருவது கவனிக்கக்கூடிய நல்அம்சமாக உள்ளதாக கூறப்படுகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+