தமிழக அரசியலில்.. தனித்து விடப்படும் தவெக? அதிரடி அரசியல் திருப்பங்களால்.. திணறிய விஜய்!
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி, தமிழக அரசியலில் சலசலப்பை கிளப்பிய விஜய் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார். கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் அனைத்தும், தற்போது கழன்று சென்றிருக்கிறது. இதனால் விஜய் சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கிறார்.
திரை நட்சத்திரமாக விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இதனை அப்படியே ஓட்டு வங்கியாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்ட விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு
கட்சி தொடங்கிய பின்னர், அவர் பங்கேற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சார கூட்டங்கள் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், அரசியல் களத்தில் சிங்கிளாக நின்று வண்டியை ஓட்டிவிட முடியாது. எனவே, கூட்டணிக்கான கதவை திறந்து வைத்தார் விஜய். நிபந்தனைகள் ரொம்ப சிம்பிள். முதல்வர் வேட்பாளர் விஜய்தான். அதேபோல கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும்.
காங்கிரஸின் ஆட்டம்
இந்த சலுகைதான் விவாதங்களை கிளப்பியிருந்தது. ஏனெனில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை திராவிட கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தது கிடையாது. தேர்தலில் நின்னோமா.. ஜெயிச்சோமா என்று இருக்கனும். அமைச்சர் பதவி என்றெல்லாம் கேட்க கூடாது என்று திராவிட கட்சிகள் திட்டவட்டமாக கூறியிருந்தன. இப்படி இருக்கையில், விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொன்னவுடன், காங்கிரஸ் இந்த கோரிக்கையை கையில் எடுக்க தொடங்கிவிட்டது.
கனவு கண்ட விஜய்
காங்கிரஸ் இவ்வளவு ஸ்ட்ராங்காக பேசவும், நிச்சயம் கூட்டணிக்கு வரும் என விஜய் கனவு கண்டிருந்தார். மறுபுறம் டிடிவி தினகரனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏழாம் பொருத்தம் இருந்தது. எனவே, டிடிவி தவெகவில் இணைய யோசிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் விஜய் கணக்கு போட்டிருந்தார். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு குரல் கொடுத்ததோடு, விஜய் மீதான தனது பாசத்தை நிறுத்திக்கொண்டது காங்கிரஸ். எனனதான் விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட் போட்டிருந்தாலும், கூட்டணி விஷயத்தில் எந்த மூவையும் காங்கிரஸ் செய்யவில்லை.
திமுக உடனான சீட் பேரத்திற்கு காங்கிரஸ், தவெகவை பயன்படுத்திக்கொள்கிறது. அப்படியெல்லாம் எடுத்தோம், கவுத்தோம் என கதர் தலைவர்கள் முடிவெடுத்துவிட மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.
வண்டியை திருப்பி டிடிவி தினகரன்
அதேபோல டிடிவி தினகரனை பொறுத்தவரை, எடப்பாடி என்பவர் துரோகி. அவர் முதலமைச்சராக இருக்கும் கூட்டணியில், நாங்கள் நிச்சயம் சேர மாட்டோம் என்று கூறியிருந்தார். மட்டுமல்லாது, "தேர்தல் நேரத்தில் எதிரி யார்? துரோகி யார்? நண்பன் யார்? என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியாது. தமிழ்நாட்டின் நலனுக்கு, யாருடன் கூட்டணி வைத்தால் சரியாக இருக்குமோ.. அவர்களுடன் கூட்டணி வைப்போம். கவுரவமான இடங்களைப் பெற்று கூட்டணி அமைப்போம். அமமுகவினர் உறுதியாக அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள்" என்று பேசியிருந்தார்.
பங்காளி சண்டை
அமைச்சர்களாக அமமுகவினர் ஆவார்கள் என்று பேசியிருப்பதன் மூலம், தவெக-வை ஏற்றுக்கொண்டாரோ? என்று சந்தேகம் எழுந்தது. இருப்பினும் இன்று இந்த சந்தேகத்திற்கு எண்ட் கார்டு போட்டு, என்டிஏ கூட்டணியில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன். என்னங்க.. எடப்பாடி துரோகின்னு சொல்லிட்டு.. அவர் தலைமையிலான கூட்டணியில் இணையுறீங்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப.. "எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டடைதான். மற்றபடி ஒன்னுமில்லை" என்று நழுவிவிட்டார் டிடிவி.
இதனால் தவெகவின் கூட்டணி கனவு பலிக்காமல் போயிருக்கிறது. தேமுதிக மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமகவும் விரைவில் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமாகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் விஜய் தமிழக அரசியல் களத்தில் தனித்து விடப்பபட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications