• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"க்ளைமேக்ஸ்" வந்தாச்சு போல.. ஜெ.வுக்கு பறந்த "ரகசிய" மெசேஜ்.. சசிக்கு கூடும் பலம்.. அப்ப எடப்பாடி?

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்த செய்தி ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இது எத்தகைய மாற்றத்தை அதிமுகவுக்குள் ஏற்படுத்த போகிறது என்பது எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான நன்மதிப்பு இருக்கவே செய்கிறது.. திமுக அரசை துணிந்து எதிர்த்தது முதல் இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் ஒரு காரணம்தான் சசிகலா.. கடந்த காலங்களில், சசிகலாவை மிக மோசமாகவும், கடுமையாகவும் விமர்சித்து வந்தவர் ஜெயக்குமார்..

ஓவர் பேச்சு.. மாட்டிக் கொண்ட மதுரை ஆதீனம்.. போலீசுக்கு ஓடிய அர்ஜுன் சம்பத்.. என்னவாம்..?ஓவர் பேச்சு.. மாட்டிக் கொண்ட மதுரை ஆதீனம்.. போலீசுக்கு ஓடிய அர்ஜுன் சம்பத்.. என்னவாம்..?

சைலண்ட்

சைலண்ட்

எடப்பாடியே சைலண்டாக இருந்தாலும், அவரைவிட அதிகமாக சீறியவர் ஜெயக்குமார்.. இதெல்லாம் கணக்கு போட்டுதான், ஜெயக்குமாரை மனதில் வைத்து ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க எடப்பாடி நிறைய பிளான்களை போட்டு வைத்தார்.. குறிப்பாக, கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கவும் யோசித்து வைத்திருந்தார். அதனால்தான் எம்பி பதவியை ஜெயக்குமாருக்கு தராமல், தன்னுடைய இன்னொரு ஆதரவாளரான சிவி சண்முகத்துக்கு வழங்கினார் எடப்பாடி..

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அதனால்தானோ என்னவோ, வழக்கத்தைவிட அதிகமாக, சசிகலாவை சீண்ட ஆரம்பித்துவிட்டார்.. இந்த விஷயமெல்லாம் தெரிந்து சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கொந்தளித்து விட்டனராம்.. சசிகலாவின் சகோதரர் திவாகரன் சமீபகாலமாகவே, சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருகிறார்.. ஜெயக்குமார் இப்படி பேசி கொண்டிருப்பதை பார்த்து, அதிர்ந்து போயுள்ளார்.. அதிமுகவில் உள்ள சில சோர்ஸ்கள் மூலம் தனது கோபத்தையும் ஜெயக்குமாருக்கு பாஸ் பண்ணியுள்ளாராம் திவாகரன்..

எடப்பாடி ஷாக்

எடப்பாடி ஷாக்

அதாவது, சசிகலா விஷயத்தில் ஜெயக்குமாரை அடக்கி வாசிக்க சொல்லியிருப்பார் என்கிறார்கள்.. ஜெயக்குமாரையும் ஆஃப் செய்துவிட்டால், மிச்சமிருப்பது எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஆவார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பேட்டி தந்துள்ளார் திவாகரன்.. அந்த பேட்டியில், மறைமுகமாக எடப்பாடிக்கும் ஒரு செக் வைத்து கலங்க வைத்துள்ளார்.. திவாகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது:

பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

சசிகலா கட்சியில் சில எதிர்பார்ப்புகளையும், சில நகர்வுகளையும் செய்து வருகிறார். அவர் அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறாரோ இல்லையோ, அவர் தான் பொதுச்செயலாளர் என்று பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்மானத்தை இன்னும் பெரும்பாலான அதிமுகவினர் ஏற்று கொண்டுள்ளார்கள்... ஆறுமுகசாமி விசாரணை முடிவுற்றது... ஆனால், அறிக்கை வெளிவரவில்லை. இதை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.. ஏனென்றால் அநியாகமாக பல உயிர்கள் பலியாகி விட்டது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சசிகலாவின் அடுத்த முடிவு எப்படி இருக்கும்? அவர் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க போகிறார்? சிதறி கிடக்கும் அதிமுகவை சீரமைக்க முயன்றால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்... சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சசிகலா ஒரு பெண்... எனவே அவரை சுற்றி இருப்பவர்கள் நல்ல செய்திகளை சொல்லி கொடுக்க வேண்டும்.. சசிகலா தலைமையில் புதிய தலைமை ஏற்படுத்த ஒரு சிலரை தவிர அதிமுகவில் பெரும்பாலானோர் தயாராக இருக்கின்றனர்.

கலக்கம்

கலக்கம்

சசிகலாவின் நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவது... இதற்கு காலம் பதில் சொல்லும். அதிமுகவில் இருந்து கொண்டு சம்பாதித்தவர்கள் ஒரு போதும் அதிமுக கட்சிக்கு துரோகம் செய்ய கூடாது... அதிமுகவிற்கு தற்போது சோதனையான நேரம். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர இயக்கத்தை அழிக்க கூடாது. அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு உண்மையான அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும்" என்று திவாகரன் கூறியுள்ளார்.. எடப்பாடியை குறி வைத்தே இந்த பேட்டி தரப்பட்டுள்ளது, அவரது தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்..!

English summary
Is vk Sasikala angry with admk ex ministers, and Whats divakarans say about admk திவாகரன் பேட்டியில் அதிமுக நிர்வாகிகளையும், சசிகலா பற்றியும் பேசியுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X