ஆம்ஸ்டாங்கிற்கு இசை அஞ்சலி! எள்ளு வய பூக்கலையே! ஏறெடுத்தும் பாக்கலையே! கதறிய பிக்பாஸ் இசைவாணி
சென்னை: எள்ளு வய பூக்கலையே என்ற பாடலுக்கு பிக்பாஸ் பிரபலம் இசைவாணி பாட, ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஒரு கட்டத்தில் இசைவாணியும் பாட முடியாமல் கதறி அழுதார்.
சென்னை பெரம்பூர் வேணுகோபாலசுவாமி தெருவில் வசித்து வந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவருக்கு வயது 52. வடசென்னை மக்களின் நலனுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர் என்கிறார்கள்.

இவர் தனது வீட்டருகே அதே தெருவில் புதிய வீட்டை கட்டி வருகிறார். அந்த வீட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளை தினமும் பார்வையிடுவார். அந்த வீட்டில் தினந்தோறும் 1 மணி நேரமாவது இருந்துவிட்டுத் தான் செல்வார்.
அப்படித்தான் அங்குள்ள கட்டுமான பணிகளை பார்வையிட நேற்று முன் தினம் பார்வையிட ஆம்ஸ்ட்ராங் வந்திருந்தார். அங்கு அவர் தனது ஆதரவாளர்கள் இருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செம்பியம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விசாரணையில்
இவர் தினந்தோறும் குறித்த நேரத்திற்கு புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வருகிறார் என்பதை மர்ம கும்பல் கண்காணித்துள்ளது.
இவருடைய கட்டுமான வீட்டிற்கு எதிரே ஒரு பிரியாணி கடை இருக்கும். அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால் உணவு டெலிவரி பாய் போல் போனால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பதால் மர்மகும்பல், உணவு டெலிவரி நிறுவனத்தின் உடையை போட்டுக் கொண்டு வந்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக தெரிகிறது.
அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு ஊர்வலமாக பெரம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வீட்டில் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அவருடைய உடல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி அப்படித்தான் அங்குள்ள கட்டுமான பணிகளை பார்வையிட நேற்று முன் தினம் செலுத்த அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அப்போது வடசென்னையில் பிறந்து பெண்ணாக இருந்து கானா பாடல்களை பாடி சாதனை படைத்த இசைவாணியும் அவருடைய குழுவினரும் அங்கு இரங்கல் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது இசைவாணி, எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே என்ற பாடலை பாடிய போது அங்கிருந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை நினைத்து கண்ணீர் விட்டு கதறினர். அது போல் பாடலை பாடிய இசைவாணியே அழுதுக் கொண்டே பாடினார். ஒரு கட்டத்தில் பாட முடியாமல் அழுது கொண்டே இருந்தார். அவரை உடன் இருந்தவர்கள் தேற்றி பாட வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் குறித்து இசைவாணி கூறுகையில் அண்ணன் நிறைய பேரை படிக்க வைத்துள்ளார். அடிதட்டு மக்களில் நிறைய பேருக்கு உதவிகளை செய்துள்ளார். சுமார் 800 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேல் தான் செய்த உதவியை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அன்பு கட்டளை போடுவார்.
அவருடைய பெரிய கனவே வீடு கட்டணும் என்பதுதான். ஆனால் அந்த இடத்தில் அவரை இப்படி செய்துவிட்டார்கள். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார், ஊக்கமளிப்பார். அவரது இழப்பு எங்களுக்கு பெரிய இழப்பு என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
-
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்!












Click it and Unblock the Notifications