கால்ல விழுந்தும் கொடுக்கலையே.. கல்விதானே கேட்டா கொடுங்களேன்.. பிக்பாஸ் இசைவாணி உருக்கம்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் லக்சூரி பட்ஜெட் டாஸ்க்கில் கானா பாடகி இசைவாணி உருக்கமான ஒரு வேண்டுகோளை மக்களிடத்தில் வைத்துள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி முதல் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார். வட சென்னையைச் சேர்ந்த இவர் பெஸ்ட் கேர்ள் என பிபிசி தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசனில் இரண்டாவது நாளான நேற்று பிக்பாஸ் வீட்டில் லக்சூரி பட்ஜெட்டிற்கான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கை மாஸ்டர் புகழ் நடிகர் சிபி வாசித்தார்.

பிக்பாஸ் வீடு
அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதை, வாழ்க்கையில் நடந்த ஏற்றத் தாழ்வுகளை எந்தவித சஞ்சலமும் இன்றி விவரிக்க வேண்டும். அதன்படி நேற்று கானா பாடகி இசைவாணி முதலில் அழைக்கப்பட்டார். அவர் பேசியது உருக்கமாக இருந்தது. அவர் சந்தித்த கஷ்டங்களையும் அதை போக்க யாரும் உதவாததையும் எண்ணி கண்ணீர் சிந்தினார்.

இசைவாணி
இசைவாணி, வடசென்னையை சேர்ந்தவர். இவரது தந்தை ஹார்மோனிய கலைஞர். சில காலம் துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பமே நிலைக்குலைந்தது. ஹார்மோனிய கலைஞரான இசைவாணியின் தந்தைக்கு வேறு வேலை தெரியாததால் அவரது தாய் போஸ்ட் ஆபிஸில் கூலி வேலைக்கு சென்றார்.

உடுத்திய ஆடை
அங்கு அவருக்கு ரூ 7 கூலியாக கிடைக்கும். இதில்தான் இசைவாணி, அவரது அண்ணன், அப்பா, அம்மா ஆகியோர் ஜீவனம் நடத்த வேண்டியிருந்தது. அக்கம்பக்கத்து குழந்தைகள் உடுத்தும் உடையை பார்க்கும் போது தனக்கும் புதிய உடை உடுத்த வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் காசு இருக்காது. தனக்கு நினைவு தெரிந்து முதலில் அவர் உடுத்திய ஆடையின் விலை ரூ 30 ஆகும்.

ஹவுஸ் ஓனர் சண்டை
வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஹவுஸ் ஓனர் சண்டை போடுவார், பின்னர் காலி செய்துவிட்டு வேறு வீடு, அங்கும் வாடகை பிரச்சினை, அடுத்து காலி செய்துவிட்டு இன்னொரு வீடு என வாழ்ந்து வந்த இசைவாணிக்கு இன்று வரை சொந்த வீடு இல்லை என்றார். தனது அண்ணன் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் அவரை படிக்க வைக்க தனது அப்பா , சொந்தக்காரர்களின் கால்களில் விழுந்து படிக்க வைக்க கோரியதாகவும் ஆனால் அவர்களிடம் பணம் இருந்தும் மனம் இல்லை என்றும் மிகவும் உருக்கமாக கூறினார்.

உதவி செய்யுங்களேன்
படிப்புதானே யாராவது கேட்டால் உதவி செய்யலாமே. அன்று தனது அண்ணனுக்கு உதவியிருந்தால் அவரும் படித்து நல்ல நிலையை அடைந்திருப்பாரே என மிகவும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார் இசைவாணி. இவர் சொல்வதும் நியாயம்தானே. உணவு, உடை, இருக்க இடம் என இருந்தாலும் கல்வி கிடைத்துவிட்டால் யாரையும் எதிர்பார்க்காமல் ஒருவர் சொந்த காலில் நிற்கலாம். எனவே சொந்தமாக இருந்தாலும் பந்தமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஒருவருக்கு கல்வியை கொடுத்தால் அது அந்த தலைமுறையின் வாழ்க்கைக்கே ஒளி காட்டியதாகும்.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications