ஐ ஆம் சாரி ஐயப்பா! இது ஐயப்பன் பாடலே இல்லீங்க! கானா பாடகி இசைவாணி விளக்கம்
சென்னை: நான் பாடியது ஐயப்பன் பாடலே இல்லை. பெண்களின் உரிமைகளை பட்டியலிடும் பாடல்தான் அது என கானா பாடகி இசைவாணி தெரிவித்துள்ளார்.
பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா ரஞ்சித் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில் ஐயம் சாரி ஐயப்பா என்ற பாடலை பாடினார். இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்த பாடல் சமூகவலைதளங்களில் டிரென்டானது.

இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பாடகி இசைவாணியையும் இயக்குநர் பா ரஞ்சித்தையும் கைது செய்யக் கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளன. நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களை தவறாக பேசினார் என்பதற்காக அவரை கைது செய்தது போல் இசைவாணியை கைது செய்யாதது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இசைவாணிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இசைவாணி, தான் பெரியாரின் பேத்தி என பல இடங்களில் பதிவு செய்துள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட போது கூட இசைவாணி கண்ணீர் விட்டு கதறினார்.
பிறகு அவருக்காக இரங்கல் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது கூட அவர் நாதழுதழுக்க பாடினார். ஐயப்பன் குறித்து பாடிய பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி! இப்போ காலம் மாறிப்போச்சி என இசைவாணி பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மதத்தை இசைவாணி கொச்சைப்படுத்திவிட்டார் என அவருக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். அரசு அவரை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பாஜக வழக்கறிஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இசைவாணி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் முதலில் அந்த சர்ச்சைக்குரிய பாடலை பாடிக் காட்டினார். பிறகு அவர் கூறுகையில் இது ஐயப்பனை பற்றிய பாடலே கிடையாது. அதாவது பெண்களுக்கான உரிமைகள் குறித்த பாடல்தான் அது.
பெரியாரின் பாடல் இது. நிறைய பேர் நான் ஐயப்பனை தவறாக பாடிவிட்டேன் என்கிறார்கள். ஐயம் சாரி ஐயப்பா, நான் உள்ளே வந்தா என்னப்பா என்ற ஒரு வரியைத்தான் பயன்படுத்தியுள்ளேன். அந்த இரு வரிகளை தவிர்த்து பெண்களின் உரிமைகள் குறித்துதான் முழு பாடலும் உள்ளது.
ஆனால் யாருமே அந்த வரிகளை பற்றி பேசவில்லை, முதல் இரு வரிகளைத்தான் பேசுகிறார்கள் என இசைவாணி தெரிவித்துள்ளார்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications