Isakki Subbaiah: 5 வருடங்களாக நான்பட்ட கஷ்டம்.. ராஜினாமா குறித்து உடைத்த இசக்கி சுப்பையா
சென்னை: அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவி ராஜினாமா குறித்து இசக்கிமுத்து விளக்கமளித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை.

இதனால் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி அணியிலும், தவெகவிலும் இணைந்து வருகிறார்கள். அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை செயலகத்தில் வைத்தே அவர்கள் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து இசக்கி சுப்பையா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனது தொகுதி மக்கள் தான். அதைக் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராஜினாமா குறித்து உரிய விளக்கமளிப்பேன். என் ராஜினாமாவை ஏற்க முடிக்க என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்வது அவர்களின் கருத்து.
என்னுடைய ராஜினாமா குறித்து சபாநாயகர் உரிய முடிவு எடுப்பார். கடந்த 5 வருடங்களாக தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை பற்றி எனக்கு தான் தெரியும். தொகுதி மக்களுக்கு பணியாற்ற முடியவில்லை என்பதால் சில முடிவுகளை எடுத்தேன். முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்கிறார்.
வாய்ப்பிருந்தால் முதலமைச்சரை சந்திப்பேன். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் நான் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேனா என்பது பற்றி தெரியாது. எதிர்க்கட்சிகள் புகார் சொல்வது அவர்களின் கருத்துரிமை. சபாநாயகர் சட்டப்படி எது சரியோ அந்த நடவடிக்கை மேற்கொள்வார்" என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications