பிப்.25-ல் கோவை வரும் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்- திவிக
சென்னை: கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25-ல் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. அமித்ஷாவே திரும்பி போ! அமித்ஷாவே தமிழ்நாட்டுக்குள் வராதே என்ற முழக்கங்களுடன் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வர திட்டமிட்டிருந்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அமித்ஷா தமிழகம் வருகை தருகிறார்.

தமிழ்நாட்டின் கோவைக்கு பிப்ரவரி 25-ந் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தருகிறார். ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா, பிப்ரவரி 26-ந் தேதி கோவையில் இருந்து பாஜகவின் 5 மாவட்ட அலுவலகங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பிப்ரவரி 25-ந் தேதி கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. 'அமித்ஷாவே திரும்பிப் போ! அமித்ஷாவே தமிழ்நாட்டுக்குள் நுழையாதே என்ற முழக்கங்களுடன் இந்த கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications