ஈஷா நிறுவனர் ஜக்கிவாசுதேவ் கால் பாதம் போட்டோ 3 ஆயிரம் ரூபாயா?
சென்னை: கோவை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஈஷா யோகா மையம் இயங்கி வருகிறது. அவர்கள் தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில், ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் பாதம் புகைப்படத்தை ரூ.3,200க்கு விற்பதாக அறிவித்துள்ளனர். இது சமூகவலைதளங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஈஷா யோகா மையம் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஈஷா நடமாடும் மருத்துவர் குழு மருத்துவர் சரவணமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார். அவர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சுமார் 12 மாணவிகள் அளித்தப் புகாரில் சரவணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

அதேபோல கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் காமராஜ். இவர் ஈஷாவில் தங்கியுள்ள தன் இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கியது.
ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார். மற்றவர்களை துறவறத்துக்கு தூண்டுவது ஏன். ஈஷா மீது சில சந்தேகங்கள் உள்ளன. அதிகாரிகள் அவர்கள் மீதுள்ள வழக்கு குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் , கோவை ஈஷா மையத்தில் காவல்துறை, சமூகநல பாதுகாப்புத்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காமராஜ் வைத்து அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என ஈஷா தரப்பில் விளக்கமளித்திருந்தனர்.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள், ஈஷா அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஈஷாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில், சத்குரு பாதம் போட்டோ என்ற பொருளை விற்பனைக்கு வைத்துள்ளனர். ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் கால் புகைப்படம் ஃபிரேமான அதற்கு ரூ.3.200 விலை நிர்ணயித்துள்ளனர்.
அந்தப் படத்துக்கான விளக்கத்தில், “குருவின் பாதங்கள் போற்றப்படுகின்றன. ஏனெனில் அவை குருவின் ஆற்றலை அணுகுவதற்கான பாதையாகும். குருவின் பாதம் பணிந்து வணங்குவது ஒருவரின் நெருக்கத்தை மேம்படுத்துகிறது. மேலும் சத்குருவுடன் ஆழமான தொடர்பையும் உருவாக்குகிறது.” என்று கூறியுள்ளனர்.

இது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. பலரும் இதை கண்டித்து விமர்சனம் செய்து வருகின்றனர். சில நெட்டிசன்கள், "இந்த தருணத்தில் ஈஷா மீது வைத்த அனைத்து மரியாதையும் போய்விட்டது. மனிதர்களை கடவுளாய் பார்ப்பதை நிறுத்த வேண்டும். ஜக்கி வாசுதேவும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார் போல. பாதம் போட்டோவை விற்பனை செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர்.
முன்பு சிலர் தங்களின் பாதம் தொட்டு வணங்குவதற்கு பணம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஜக்கிவாசுதேவ் அடுத்தகட்டத்துக்கு சென்றுவிட்டார்." என்று கூறியுள்ளனர். அதேபோல ஈஷாவுக்கு ஆதரவான கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். "இந்து மதத்தில் மதகுருக்களின் பாதம் தொட்டு ஆசி வாங்குவது இயல்பான ஒன்று. இது தவறான செயல் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
பெரியவர்கள், குரு என்று பலரின் பாதம் தொட்டு ஆசிர்வாதம் வாங்குகிறோம். அவர்களின் பாதம் போட்டோவாக வைப்பதில் என்ன தவறு. இதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை. "என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications