இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! கருணாநிதி நூற்றாண்டு விழா மேடையில் ஜவாஹிருல்லா விடுத்த கோரிக்கை!
சென்னை: இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான ஒரு கோரிக்கையை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையிலேயே கருணாநிதி நூற்றாண்டு விழா மேடையில் ஜவாஹிருல்லா முன் வைத்துள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை பின்னி மில் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, இஸ்லாமியர்களுக்கும், திமுகவுக்கும் உள்ள பந்தம் குறித்து எடுத்துக் கூறினார். கருணாநிதியால் மூத்த பிள்ளை என்றழைக்கப்பட்ட முரசொலி நாளிதழை முதன்முதலில் அச்சிடப்பட்டது திருவாரூர் கருணை ஜமால் அச்சகத்தில் தான் என்பதை அவர் நினைவூட்டினார்.
அதேபோல் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நோக்கில் இருக்கையில் இருந்து எழுந்து மைக்கி நோக்கி வரும் போது பள்ளிவாசலில் ஒலித்த பாங்கை சுட்டிக்காட்டி சிலாகித்து பேசினார். அதேபோல் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் கருணாநிதி காட்டிய கருணை இன்று தேவைப்படுவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு சூசகமான முறையில் ஒரு மெசேஜை பாஸ் செய்தார்.
அதாவது கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை முதல்வர் ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும் என்பதை இப்படி நாசூக்காக கூறினார் ஜவாஹிருல்லா. கருணாநிதியை பொறுத்தவரை பத்தோடு பதினொன்றாக அவரை சாதாரண அரசியல் தலைவராக கருத முடியாது என்றும் 70களில் 'ன்' மிகுதியால் அழைக்கப்பட்டவர்களை 'ர்' மிகுதியால் அழைக்க வைத்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

அதேபோல் வட இந்தியாவில் இன்னும் பெயருக்கு பின்னால் சாதிகளை போடக்கூடிய அவலம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பெயருக்கு பின்னால் பட்டப்படிப்புகளை போட வைத்த பெருமைக்குரியவர் கருணாநிதி என புகழஞ்சலி செலுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications