5 ஏக்கர் நிலம்னு சொன்னீங்க! இப்ப வெறும் 50 ஆயிரம்தானா? இது நம்பிக்கை துரோகம் விஜய்! நயினார் கண்டனம்
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் பயிர்க் கடன் ரத்து என கூறிவிட்டு, தற்போது வெறும் ரூ 50 ஆயிரம் பயிர்க் கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்துள்ளீர்கள், இது அப்பட்டமான நம்பிக்கை துரோகமில்லையா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றியவர் ஜோசப் விஜய். ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100% பயிர்க்கடன் ரத்து என்று கூறிவிட்டு, தற்போது வெறும் ₹50,000 பயிர்க்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 100% கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களே, இது அப்பட்டமான நம்பிக்கை துரோகமில்லையா?.

இதேபோலத் தான் தேர்தலின் போது அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் 500 யூனிட்டிற்கு கீழ் உபயோகித்தால் மட்டுமே என "இக்" வைத்தீர்கள்.
எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? இத்தனை பொய் வாக்குறுதிகள்? ஆசை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுமளவிற்கு முதல்வர் பதவி மீது உங்களுக்கு அப்படியென்ன வெறி?. காற்றில் கோட்டை கட்டுவது போல, நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றவே முடியாத வெறும் வாய் வார்த்தைகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இதுதான் உங்கள் மாற்று அரசியலின் லட்சணமா?
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
குறு விவசாயிகள் ரூ 50 ஆயிரம் வரை பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ 50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும் தமிழக அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 1.5.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications