இஸ்ரேல் நசுங்கிவிட்டது! "அந்த" கைகளுக்கு முத்தம் தருவேன்.. ஈரான் சுப்ரீம் லீடர் சுளீர் அட்டாக்! ஷாக்
நியூயார்க்: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் ஈரான் தலையிட்டு வரும் நிலையில் ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. காஸாவை சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் தற்போது நேரடியாக தலையிட்டு உள்ளது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது.
பின்னணியில் ஈரான்: சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக இந்த படைக்கு பண ரீதியாக, ஆயுத தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் ஈரான் தலையிட்டு வரும் நிலையில் ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், இஸ்ரேல் ஆட்சி மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறோம். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானையும் தொடர்புபடுத்துபவர்கள் தவறாக நினைக்கிறார்கள். நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம். இதை செய்தவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் செய்தது பெரிய சாதனை.
( மிகப்பெரிய போரை நோக்கி.. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் புகுந்த 8 நாட்கள்.. ஆரம்பித்த ஆட்டம்.. ஆபத்து! )
இது மிகவும் வலிமையான மெசேஜ். இஸ்ரேல் நசுங்கிவிட்டது. இஸ்ரேல் பெரிய அடி வாங்கிவிட்டது. இஸ்ரேல் இனி முன்னேறவே முடியாது. இஸ்ரேல் எழுந்து வர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்தி இருக்கிறோம், என்று ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா கொடுத்த பதிலடியில், நாங்கள் ஒரு வலுவான செய்தியை அனுப்ப விரும்புகிறோம். இந்த போர் விரிவடைவதை நாங்கள் விரும்பவில்லை,. ஆனாலும் ஈரான் இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தியை உரத்த மற்றும் தெளிவான குரலில் நாங்கள் கொடுக்க விரும்புகிறோம்.

ஈரான் இதில் அத்துமீற கூடாது. அப்படி மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம், என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு ஈரான் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு நாங்கள் 3 வகைகளில் பதிலடி கொடுப்போம். நேரடியாக இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்துவோம். ஏமன், ஈரான், லெபனாலில் இருக்கும் எங்களிம் ஆதரவு படையான ஹெஸ்புல்லா மூலம் நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications