மிகப்பெரிய போரை நோக்கி.. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் புகுந்த 8 நாட்கள்.. ஆரம்பித்த ஆட்டம்.. ஆபத்து!
நியூயார்க்: இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தற்போது சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் மோதிக்கொள்ளும் போராக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் என்பது பாரம்பரியமாக போருக்கு இருக்கும் முக்கியமான காரணம். அது நிலத்தகராறு. அதாவது பாலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடங்கியது முதல் உலகப்போரின் முடிவில் இருந்துதான். இந்த பகுதியை யூதர்கள் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக பூமியாக கருதினார்கள். இதனால் யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு குடியேற தொடங்கினார்கள். அப்போதே யூதர்கள் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சின்ன சின்ன நில தகராறுகள் ஏற்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனியில் இருந்து வெளியேறிய யூதர்களை எல்லாம் சேர்த்து தனி நாடு உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு கடைசியில் இந்த இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை துண்டாக்கி இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனம் 1947ல் ஐநா மூலம் மொத்தமாக பங்கு போடப்பட்டது. ஐநாவின் திட்டப்படி பாலஸ்தீனம், அரபு மற்றும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இரண்டு நாடாக பிரிக்கப்படும். பாலஸ்தீன மக்களுக்கு 50%க்கும் குறைவான நிலம் ஒதுக்கப்படும்.
( 3 பக்கத்தில் இருந்தும் வரப்போகிறோம்! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க வார்னிங்! போரில் திருப்பம்)
ஜெருசலேம் சர்வதேச கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஐநா கூறியது. ஆனால் இதோடு முடியாமல் தொடர்ந்து பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து கொண்டே வந்தது. இந்த ஆக்கிரமிப்பு அடங்க முடியாத நிலைக்கு சென்று.. ஒரு கட்டத்தில் பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீனத்திலேயே வாழ முடியாத நிலை கூட ஏற்பட்டது. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் 1948ல் போருக்கு சென்றது. 1 வருடம் நடந்த போரில் இஸ்ரேல் வென்றது.
போர்: அப்போது தொடங்கிய போர்தான் பல கட்டமாக இப்போது வரை நடந்து வருகிறது. இஸ்ரேலில், இஸ்ரேல் அதிகாரத்தை எதிர்க்கும் தனி பகுதிதான் காசா. இதில் இருந்து இஸ்ரேல் முன்பே வெளியேறிவிட்டது. காரணம் இங்கே உள்ள ஹமாஸ் அமைப்பு. இந்த ஹமாஸ் அமைப்பும் - இஸ்ரேலும்தான் தற்போது பாலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன. ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன விடுதலைக்கும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மொத்தமாக விழுங்குவதற்கும் முடிவு செய்துள்ளது.

8 நாடுகள்; இந்த இரண்டு நாடுகளை சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன.
சவுதி - ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட உள்ளது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.
( சவுதி தந்த எதிர்பாராத ஷாக்.. பாலஸ்தீனத்தை ஆதரிப்போம்.. சல்மான் அறிவிப்பால் கதறிய இஸ்ரேல், அமெரிக்கா)
இதனால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்வதில் சவுதிக்கு பெரிய நெருக்கடி உள்ளது. இன்னொரு பக்கம் ஹமாஸ் இயக்கத்திற்கு ரகசியமாக உதவி செய்வதே ஈரான்தான் என்ற புகாரும் உள்ளது. அதன்படி ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுதங்கள், உளவு தகவல்கள், இந்த மோதலுக்கு திட்டம் போட்டு கொடுத்ததே ஈரான்தான் என்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைக்கிறது.
எச்சரிக்கை: இதனால் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பின் வேறு ஒரு முக்கியமான காரணமும் உள்ளது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது

லெபனானில் ஆயுதப்படை குழுவாகவும், அரசியல் கட்சியாகவும் இந்த ஹெஸ்புல்லா இயங்கி வருகிறது. ஷியா பிரிவு இயக்கமான இது , அந்நாட்டு அரசுக்கு மிகவும் நெருக்கமானது. அதேபோல் ஈரான் போன்ற மற்ற ஷியா நாடுகளுக்கும் நெருக்கமாக இருக்கிறது. இந்த அமைப்புதான் சிரியாவில் அரசுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. அதேபோல் ஈரான் உடன் இணைந்து லெபனானில் இஸ்ரேல் ஆதிக்கத்தை தடுக்க போராடி வருகிறது.
இப்படி நேரடியாக, மறைமுகமாக இந்த நாடுகளும் போரில் களமிறங்கி உள்ளன என்பதால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications