நிலவில் பிரக்யான்.. தமிழ்நாட்டில் பிரக்ஞானந்தா.. வீடு தேடி வந்து பாராட்டிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்
சென்னை: உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அவரது வீட்டிற்கு நேரில் சந்தித்து பாராட்டி பரிசளித்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ஸ்பேஸ் ஷட்டில் 2 முறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஒருமுறை கடலிலும், ஒருமுறை விமான ஓடுதள பாதையிலும் சோதனை செய்யப்பட்டது. இறுதிக்கட்ட சோதனை விண்வெளிக்கு அனுப்புவது தான்.

ஆதித்யா வரும் ஜனவரியில் எல் ஒன் சுற்றுப் பாதையை சென்றடையும். அதன் பிறகு அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்திலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். குலசேகரபட்டினத்தில் தயாராகும் ஏவுகணை தளம் பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்கும் என்றார்.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள், இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அதிகசெலவு ஏற்படுகிறது. குலசேகரப்பட்டினத்தில் ஏவப்படும் விண்கலங்கள் நேரடியாக விண்வெளியை சென்றடையும். எஸ்.எல்.வி போன்ற சிறிய வகை ராக்கெட்களுக்கு குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் இன்று சென்னை பாடியில் உள்ள பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். உலக செஸ் சாம்பியன் போட்டியில் பிரக்ஞானந்தாவை பாராட்டிய சோம்நாத், சந்திரயான் மினியேச்சர் மாடலை பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், நிலவில் பிரக்யான் ரோவர் உள்ளது. தமிழ்நாட்டில் பிரக்ஞானந்தா இருக்கிறார் என்று கூறினார். தொடர்ந்து பிரக்ஞானந்தா குடும்பத்தினருடன் காலை உணவு சாப்பிட்ட சோம்நாத், தலைமை செயலகம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியா, அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது. இந்தியாவின் 40 ஆண்டுகால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது. அதாவது, விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் தன் முதல் ஏவுகணையான ககன்யானை அடுத்து ஆண்டு செலுத்த உள்ளது. ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மூலம், 3 பேர் கொண்ட இந்தியக் குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அண்ணா பல்கலைக்கழகத்திலும், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திலும் நடைபெற உள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். மாணவர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் இன்று இரவு பெங்களூரு திரும்புகிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications