பூமி செத்துப்போனா இப்படித்தான் இருக்கும்.. வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய முக்கிய காரணம் இதுதான்!
சென்னை: ஹரியானா உட்பட ஐந்து மாநில தேர்தல் பரபரப்புக்கு இடையில் ஒரு வழியாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
நாம் எல்லோரும் வெள்ளி கிரகத்தை ஒரு முறையாவது பார்த்திருப்போம். ஆனால் இது வெள்ளி கிரகம்தான் என்று தெரியாமலேயே நம்மில் பலர் இதை பார்த்திருப்போம் என்பதுதான் இதில் ட்விஸ்ட். ஏனெனில் இந்த கிரகம், சாதாரண நட்சத்திரத்தை போலவே இருக்கும். இப்படி கண்ணாம்பூச்சு காட்டும் வெள்ளி கிரகம் குறித்து ஏராளமான தகவல் தமிழ் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. வெள்ளியை வைத்து மழையை கூட நாம் கணித்திருக்கிறோம்.

இப்போது விஷயம் என்னவெனில், இந்த வெள்ளி ஏன் இப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. எனவே, இதை கண்டுபிடிக்ககத்தான் இஸ்ரோ முயன்று வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதன்படி இஸ்ரோ ஒரு செயற்கைக்கோளை உருவாக்கும். இதனை வெள்ளி கிரகரத்தை சுற்றி வலம் வர வைக்கும். இதற்கு 'வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பூமியை போலவே அளவு, பூமியில் இருப்பதை போலவே வளிமண்டலம், காற்று, மலை, மண், கற்கள்.. எல்லாம் வெள்ளி கிரகத்தில் இருக்கிறது. எனவே, இதை ஆய்வு செய்வதன் மூலம் எதிர் காலத்தில் நமது பூமி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். சிம்பிளாக சொல்வதெனில், பூமியின் அழிவை, வெள்ளி கிரகத்தின் மூலம் பார்க்க முடியும்.
ஏனெனில் வெள்ளி ஒரு இறந்து போன கிரகமாகும். சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நீர் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது அங்கு வெறும் பாறைகளும், மணல் துகள்களும் மட்டும்தான் இருக்கிறது.
அதாவது வெள்ளி கிரகம் சூரியன் குடும்பத்தின் இரண்டாவது கோள். ஆனால் பயபுள்ளைக்கு சூரியன் மீது கொஞ்சம் பாசம் அதிகம். எனவே தனக்கு கிடைக்கும் வெப்பத்தை வெளியில் விடாமல் உள்ளேயே வைத்துக்கொள்கிறது. இதனால் சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான கிரகம் என்கிற பட்டத்தையும் பெற்றிருக்கிறது. அடர்த்தியான வளி மண்டலமும், வளிமண்டலம் முழுக்க இருக்கும் கார்பன் டை ஆக்சைடும்தான் (Co2) இந்த கிரகம் இறந்து போவதற்கான காரணம்.
சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை வெள்ளயின் வளி மண்டம் இழுத்து உள்ளேயே தக்க வைத்துக்கொள்ளும். இந்த வெப்பம் அதிக அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. அழுத்தமும் வெப்பமும் சேர்ந்து வெள்ளி கிகரத்தில் உள்ள நீரை முழுவதுமாக காலி செய்திருக்கிறது. எனவே இப்போதைக்கு அங்கு எந்த உயிரினமும் இல்லை.
பூமியில் பெரும் தொழிற்சாலைகளிலிருந்து வௌியேறும் புகை, வாகன புகை, அதில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவுக்கு மீறினால் நமது பூமியும் வெள்ளி போலவே இறந்துவிடும். எனவே, கார்பன் டை ஆக்சைடு அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்துக்கொள்ள இஸ்ரோ முனைப்பு காட்டி வருகிறது. எனவேதான் 'வீனஸ் ஆர்பிட்டர் மிஷனை' செயல்படுத்த இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications