அப்பாடா.. முதல் ரவுண்டை முடித்த சந்திராயன் 3! மொத்தம் 5 ரவுண்டு - இஸ்ரோ வெளியிட்ட குட் நியூஸ்
சென்னை: நிலவை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்த சந்திராயன் 3 விண்கலம் முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பி சாதித்த ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் 4 வது நாடாக இடம்பிடிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறது இஸ்ரோ. 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திராயன் 1 விண்கலம் தோல்வியடைந்தது.

அதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலமும் ரோவர் கருவி தரையிறங்கும்போது மோதியதால் வெடித்து சிதறி தோல்வியடைந்தது. இருந்தும் மனம் தளராத இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 விண்கலத்தை உருவாக்கினர். கவுண்டவுன் நிறைவடைந்து நேற்று இந்த ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டது. நிலவின் தெற்கு பகுதியில் இந்த சந்திராயன் 3 ஐ தரையிறக்குவது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்கானித்து வருகிறார்கள். இந்த சந்திராயன் 3 விண்கலம் ஒரு மாதம் கழித்து வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து ஒரு சந்திர நாள் எனப்படும் சுமார் 14 நாட்கள் கழித்து சந்திராயன் 3 செயல்பட தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Chandrayaan-3 Mission update:
— ISRO (@isro) July 15, 2023
The spacecraft's health is normal.
The first orbit-raising maneuver (Earthbound firing-1) is successfully performed at ISTRAC/ISRO, Bengaluru.
Spacecraft is now in 41762 km x 173 km orbit. pic.twitter.com/4gCcRfmYb4
இந்த நிலையில் நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும்.
இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முதல்முறை பூமியின் நீள் வட்டப்பாதையை சந்திராயன் 3 விண்கலம் சுற்றி வந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் தற்போது 41762 km x 173 km ஆர்ப்பிட்டில் உள்ளது எனவும் இஸ்ரோ விளக்கி இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications