6,100 கிலோ எடை.. அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ!
சென்னை: தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள, அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. இதை இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தியிருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்-3 ராக்கெட் ஏவப்பட திட்டமிட்டிருந்தது. ஆனால், விண்வெளி குப்பைகள் காரணமாக 90 விநாடிகள் தாமதத்திற்கு பின்னர் ராக்கெட் ஏவப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் சாதனை
ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில், ராக்கெட்டிலிருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்து, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கொள் இதுதான். விண்வெளி துறையில் ஜாம்பவானாக சொல்லப்படும் அமெரிக்கா, தனது செயற்கைக்கோளை ஏவ இந்தியாவை நாடியிருப்பது கவனிக்கத்தக்கது.
ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள்
எந்தவொரு சிறப்புச் சாதனங்கள் எதுவுமின்றி, சாதாரண 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் அமைப்பின் ஒரு பகுதியாக ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணிலிருந்து LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட பேலோடும் இதுவே. இந்த செயற்கைக்கோளின் எடை 6,5100 கி.கி ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்துடன் செய்துகொண்ட வணிக ஒப்பந்தத்தின் கீழ், ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
இந்த மிஷன் பலவிதங்களில் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இது. விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை இது பெரிதும் மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்பதே இதன் உண்மையான முக்கியத்துவம்.
இந்தியாவுக்கு என்ன பலன்?
இந்த மிஷன் இந்தியாவிற்கு தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்தது. ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ அறிமுகப்படுத்துவது இஸ்ரோவின் உலகளாவிய வணிகத் திறனை வலுப்படுத்துகிறது. மேலும், அதிநவீன உலகளாவிய தொலைத்தொடர்பு முன்முயற்சிகளை ஆதரிக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தியாவால் இவ்வளவு பெரிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முடியும் என்பதை ப்ளூ பேர்டை வைத்து நம்மால் நிரூபிக்க முடியும்.
இஸ்ரோவின் பாகுபலி
இன்று விண்வெளியில் ஏவப்படும் எல்.வி.எம்-3 ராக்கெட்டுக்கு இது 6வது பயணமாகும். இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறது. எல்.வி.எம்-3 என்பது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 3 நிலைகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். இதற்கு முன்னர் சந்திரயான் 2, சந்திரயான் 3 என நிலவு பயணங்களை இந்த ராக்கெட் சாத்தியமாக்கியுள்ளது.
விண்வெளி குப்பைகள் என்றால் என்ன?
இந்த ஏவுதல் திட்டமிட்ட நேரத்தை விட 90 விநாடிகள் தாமதமாகியிருக்கிறது. இதற்கு விண்வெளி குப்பைகள்தான்காரணம். அதாவது, ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்களின் உதிரிகள் விண்வெளியில் குப்பைகளாக இருக்கும். இந்த குப்பைகள் மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. அதாவது, துப்பாக்கி தோட்டாவை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இது பயணிக்கிறது. வெறும் 1 செ.மீ அளவு கொண்ட சிறிய துகள், இவ்வளவு வேகத்தில் பயணிப்பது எல்.வி.எம்-3 ராக்கெட்டின் மொத்த மிஷனையும் தோல்வியடைய செய்துவிடும். எனவேதான் இந்த குப்பைகள் கடந்த பின்னர் ராக்கெட் ஏவப்பட்டிருக்கிறது.
பிரதமர் மோடி பாராட்டு
எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். தனது 'எக்ஸ்' பதிவில், "இந்திய இளைஞர்களால், விண்வெளித் திட்டம் மேம்பட்டு, தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்.வி.எம்.3 இன் கனரகத் தூக்கும் திறன், ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கும், வணிக ஏவுதலுக்கும், சர்வதேச கூட்டுக்கும் அடித்தளமிடுகிறது. இந்த சுயசார்பு வருங்கால சந்ததியனருக்கு அற்புதமானது" என்று குறிப்பிட்டார்.
-
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications