ஐரோப்பிய செயற்கைக்கோளை தாங்கி செல்லும் இஸ்ரோ ராக்கெட்! மாஸ் காட்டும் இந்தியா
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய, ஐரோப்பிய நாடுகள் தயாரித்துள்ள நவீன செயற்கைக்கோளை இஸ்ரோ அடுத்த மாதம் விண்ணில் ஏவுகிறது. 'ப்ரோபா-3' என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் சூரியனின் மேற்புறத்தில் உள்ள கொரோனல் எனும் பகுதியை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாம் உயிர் வாழ்வதற்கு சூரியன் மிகவும் அவசியமானதாகும். அதேபோல நம்முடைய அழிவுக்கும் சூரியன்தான் காரணமாக இருக்கப்போகிறது என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றன. அதாவது சூரியனின் மேற்புறத்தில் கொரோனல் எனும் பகுதி உள்ளது. இங்கிருந்து சூரிய புயல்கள் அவ்வப்போது வெளியாகிறது. சிறிய அளவில் உள்ள புயல்கள் பூமியை தாக்கினாலும் பாதிப்பு இருக்காது. இதே கொஞ்சம் பெரிய புயலாக இருந்தால் பூமிக்கு சிக்கல் ஏற்படும்.

இது நாம் பயன்படுத்தும் அனைத்து மின்னணு சாதனங்களையும் தாக்கி செயலிழக்க வைத்துவிடும். கடந்த 1859ம் இதேபோன்று பூமியை சூரிய புயல் தாக்கியது. இதனால் அப்போது இருந்த மின்னணு சாதனங்களான தந்தி தொழில்நுட்பம் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் ஆனது. இப்போதும் இதேபோன்ற புயல் தாக்கினால் செயற்கைக்கோள்கள் செயலிழந்துவிடும். மட்டுமல்லாது, செல்போன், கணினி என அனைத்தையும் காலி செய்துவிடும்.
இன்றைய காலகட்டத்தில் பல அணு உலைகள் எலக்ட்ரானிக் சாதனங்களின் உதவியோடுதான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே எதிர்காலத்தில் எந்த பேரழிவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், சூரிய புயலை முன்கூட்டியே கணிக்கவும், அதை புரிந்துக்கொள்ளவும் விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் 'ப்ரோபா-3' விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இதற்கு முன்னர் சூரியனை ஆய்வு செய்ய ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த 'ப்ரோபா-3' மிகவும் வித்தியாசமானதாகும்.
'ப்ரோபா-3' மிஷன் என்பது இரண்டு செயற்கைக்கோள்களின் தொகுப்பாகும். ஒரு செயற்கைக்கோள் முன்னேயும், இன்னொன்று 150 மீ தூரத்தில் பின்னேயும் சூரியனை சுற்றி வரும். இப்படி இரட்டை செயற்கைக்கொள்களை, ஒரே நேர்க்கோட்டில் குறிப்பிட்ட இடைவெளியில் சுற்றி வரும் வகையில் எந்த நாடும் ஏவியதில்லை. இது குறித்து ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகையில்,
"சூரியனின் மேற்புறத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, அந்த பகுதியை உற்று நோக்கி ஆய்வு செய்வது கஷ்டமான வேலை. சூரிய கிரகணம் ஏற்படும்போது, சூரியனின் மேற்புறத்தை பார்க்க முடியும். இந்த யோசனை வைத்துதான் நாங்கள் இரண்டு செயற்கைக்கோள்களை அனுப்ப இருக்கிறோம். முதல் செயற்கைகோள் சூரியனை மறைக்கும். இதனால் பின்னால் உள்ள செயற்கைகோளுக்கு சூரியனின் மேற்புறம் தெளிவாக தெரியும். இப்படித்தான் நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
இவ்வளவு தனிச்சிறப்பு வாய்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவ, இஸ்ரோவை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தேர்வு செய்திருப்பது இஸ்ரோவுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications