இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்.. கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (பிப்ரவரி 20) முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையில் நடந்துள்ளது. முதல் ஆண்டில் 111 மாணவர்கள், இரண்டாம் ஆண்டில் 153 மாணவர்கள் மற்றும் 3வது ஆண்டில் 337 மாணவர்களுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால், மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
நடப்பாண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (பிப்ரவரி 20) முதல் வருகிற மார்ச் 20-ந்தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை பொறுத்தவரை இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தார்கள். இதில் சிறந்த 337 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் மாற்றங்களை இளம் மாணவர்கள் அறிந்து கொள்ள இந்த திட்டம் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.
நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்கவே இஸ்ரோ இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இந்த யுவ விஞ்ஞானி கார்யக்ரம் திட்டத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை அளிக்கப்பட உள்ளது.
வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் இடம் பெறுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications