உதயநிதி ஸ்டாலின் வழக்கில் ‘ட்விஸ்ட்’.. கூடுதல் டைம் கேட்ட வருமான வரித்துறை! ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆதாரங்களை சேகரிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஒட்டுமொத்தமாக, அசையும் சொத்துகளாக உதயநிதியிடம் ரூ.12.92 கோடியும், அவரது மனைவி யிடம் ரூ.13.25 கோடியும், மகளிடம் ரூ.2.56 லட்சமும் உள்ளன. இதுதவிர, உதயநிதி பெயரில் ரூ.7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன் ரூ.2 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ரூ.10.98 கோடி வருமானம் உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வருமானம் மற்றும் சொத்து அதிகரித்ததாக கூறுவது குறித்து உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கும், கார்ப்பரேட் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருமான வரித்துறை தரப்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உதயநிதியின் வருமான வரி கணக்கு விவரங்கள் மட்டுமே தங்கள் வசம் இருப்பதாகவும், மேலும் ஆதாரங்களை சேகரிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வருமான வரித்துறைக்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications