Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 ஆண்டுகள் ஓவர்.. இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காத இந்திய பிரதமர்.. வெளியான ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் அவ்வப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவதுண்டு. அந்த வகையில் இந்தியாவில் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. இது காங்கிரஸுக்கு பெரும் அடியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக இப்போது மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தியப் பிரதமர்கள் கடைசியாக பத்திரிகையாளர்களை சந்தித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

It has been 10 years since Indian Prime Ministers met the press

இதனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்த பன்கஜ் பச்சோரி தெரிவித்திருக்கிறார். நேற்று இது குறித்து அவர் தனது x சோஷியல் மீடியா தளத்தில், "இந்தியப் பிரதமர் ஒருவரின் கடைசி செய்தியாளர் சந்திப்பு நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. 100க்கும் அதிகமான பத்திரிகையாளர்களுடன், 62 திட்டமிடப்படாத கேள்விகளுக்கு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கடைசியாக 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 03ம் பதிலளித்திருந்தார்" என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில், ஜனநாயக அமைப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய நிதி நெருக்கடி, வேளாண் கடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம் மற்றும் கல்வி, உள்நாட்டு உற்பத்தி, உற்பத்தித் துறை, வேலை வாய்ப்பு, பணவீக்கம், ஊழல், 2ஜி போன்ற கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங், பல கேள்விகளுக்கு மௌனமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடுமையாக விமர்சித்திருந்தன.

இப்படியான நிலையில்தான் பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதில்லை. ஆனால் அமெரிக்காவில் அதிபர் பைடனுடன் கடந்த ஆண்டு செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் அவர் ஒரு கேள்விக்கு மட்டுமே விடையளித்திருந்தார்.

வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சப்ரினா சித்திகி, "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமர்சிப்பவர்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

It has been 10 years since Indian Prime Ministers met the press

இதற்கு "ஜாதி, மத அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயக கொள்கைகளில் எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை" என்று பிரதமர் மோடி பதிலளித்திருந்தார். 'அரசை விமர்சிப்பவர்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றனவே' என்கிற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்த செய்தியாளர் சந்திப்பு பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. சப்ரினா சித்திகி சோஷியல் மீடியாக்களில் கார்னர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு விமர்சனங்களுக்கு இடையில்தான் பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு குறித்த சலசலப்புகள் மேலெழுந்திருக்கின்றன. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 2004-2014க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் 117 முறை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+