விஜயகாந்தை மொத்தமாக முடக்கியது இந்த ஒரு பிரச்சனை தான்.. எல்லாம் தலைகீழாக மாறியது!
சென்னை: விஜயகாந்த் போல் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்தவர்கள் மிகக்குறைவு. ஆனால் விஜயகாந்ந்த உடல் நிலையை மொத்தமாக முடக்கியது சிறுநீரகப் பிரச்சினை ..சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும், தைராய்டு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வந்ததால் அவரால் அதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் அவர் போல் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்கள் குறைவு. இளம் வயதில் தினமும் உடற்பயிற்சி, சரியான உணவு என கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார். அவர் சினிமாவில் உச்சம் தொட்டு அரசியலிலும் மிகப்பெரிய உயரத்திற்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் உடல்நிலை பாதிப்பு அவரைமொத்தமாக முடக்கியது.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் உச்சத்தில் இருந்தபோது தேமுதிகவை 2005ம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கினார். , 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, முதல்முறையாக எம்எல்ஏவானார். அப்போது தேமுதிக பெற்ற வாக்குகள் காரணமாகவே திமுக மைனாரிட்டியாக ஆட்சி செய்ய வேண்டிய நிலைஏற்பட்டது. விஜயகாந்தின் அசுர வளர்ச்சி தான் அதிமுகவின் தோல்விக்கு முழு காரணமாகவும் பேசப்பட்டது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று உச்சத்திற்கு போனார். 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.
அரசியலில் வளர்ந்து வந்த விஜயகாந்த், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், 2014ம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.
2014-ல் உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகப் பிரச்சினை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அப்போது அவரிடம் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தனர். அதேநேரம் விஜயகாந்த், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன்பின்னர் உடல்நலக் குறைவால் அடிக்கடி பாதிக்கப்படட் விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா, சிங்கப்பூருக்கு சென்றார். 2019-ல் விஜயகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் தேமுதிக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். கடந்த 2020 அக்டோபர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், அவ்வப்போது விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக சென்று வந்தார்.
இதற்கிடையில் விஜயகாந்திற்க சிறுநீரக பிரச்சனைக்கு பின்னர் படிப்படியாக தைராய்டு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் வந்தது. இதனால் சரியாக நடக்க முடியாமலும், பேச முடியாமலும் அவதிப்பட்ட விஜயகாந்திற்க, 2022 ஜூலை மாதம் நீரிழிவுப் பிரச்சினை காரணமாக, வலது காலில் உள்ள விரல் அகற்றப்பட்டது. பின்னர் விஜயகாந்த் உடல் ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தார். பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வந்தார். இந்நிலையில்
வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 18-ம்தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இதையடுத்து கடந்த 11-ம் தேதி வீடு திரும்பினார். கடந்த 26-ம் தேதி இரவு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை பெற்ற விஜயகாந்த வியாழக்கிழமை (டிச.28) காலை 6.10 மணி அளவில் காலாமனார். சிறுநீரக பிரச்சனை தான் விஜயகாந்த் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட காரணமாக இருந்தது. அந்த பிரச்சனையால் தான், விஜயகாந்த் அரசியல் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது.












Click it and Unblock the Notifications