முதல் இடம் திமுகவிற்குத்தான்.. எடப்பாடி அண்ணாமலைக்கு இடையில்தான் போட்டி.. இந்த கணிப்பை பாருங்க
சென்னை: லோக்சபா தேர்தலில், எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கு இடையில்தான் போட்டி. இரண்டாம் இடத்திற்கு மட்டுமே போட்டி. முதல் இடத்திற்கு போட்டியே இல்லை. முதல் இடம் திமுகவிற்குத்தான், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2 வாரம் முன் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இப்போது அதிமுக - பாஜக பிரிந்து இருப்பதால் திமுக அணிக்கு களத்தில் போட்டியே இல்லை. 4- 5 தொகுதிகளில் கொஞ்சம் போட்டி இருக்கும். கோவை, தருமபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5-6 தொகுதிகளில் போட்டி இருக்கிறது. மற்றபடி போட்டி இல்லை.
தனக்கு எதிராக பல ஜாதிகள் உள்ளது. நாம் வெல்ல மாட்டோம். ஒருவேளை நம்முடன் சேர்ந்து பாஜக ஒன்று இரண்டு சீட் வென்றால் சிக்கல் ஆகிவிடும் என்பதால் பயந்து பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடப்பாடி எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்த காமெடியின் உச்சம் அவரை ஆளுமை என்று பிரபலப்படுத்துவதுதான். அவர் பெரிய ஆள்தான்., 4 வருடம் ஆட்சி செய்தார். முக்கியமான பல திட்டங்களை கொண்டு வந்தார்.
2021ல் தேமுதிகவை கூட்டணியை விட்டு அனுப்பி விட்டார் எடப்பாடி. அதே தேமுதிகவை மீண்டும் கூட்டணிக்கு சேர்த்துள்ளார் எடப்பாடி. தினகரன் கூட கூட்டணி வைத்த தேமுதிகவுக்கு 5 சீட் கொடுத்துள்ளார் எடப்பாடி. ராஜ்ய சபா வேறு கொடுப்பதாக கூறியுள்ளனர். அது எடப்பாடியின் வீழ்ச்சிதானே.
எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கு இடையில்தான் போட்டி. இரண்டாம் இடத்திற்கு மட்டுமே போட்டி. முதல் இடத்திற்கு போட்டியே இல்லை. முதல் இடம் திமுகவிற்குத்தான். அதில் மாற்றமே இல்லை. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தவறுகளை செய்துள்ளார். பாஜகவும் சில தவறுகளை செய்துள்ளது.
சாதகம் இல்லை: எடப்பாடிக்கு சாதகமாக எங்கும் சூழல் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு சாதி ரீதியாக எதிர்ப்பு உள்ளது. அவரின் சமூகத்தை தவிர மற்ற சமூக மக்கள் கடுமையாக அவரை எதிர்க்கின்றனர். முக்குலத்தோர் எதிர்ப்பு, கொங்கில் உள்ள மற்ற ஜாதியினர் எதிர்ப்பு, பாமக பிரிவால், வடக்கில் வன்னியர்கள் எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி எதிராக பல ஜாதிகள் கூடி உள்ளன. அப்படி இருக்க தன்னுடைய கூட்டணியில் பாஜக இருந்து அவர்கள் ஜெயிக்க கூடாது என்பதால் எடப்பாடி கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.
அதிமுக ஜெயிக்காது, அதனால் பாஜகவும் ஜெயிக்க கூடாது என்று எடப்பாடி இப்படி செய்துள்ளார். இப்போது அதிமுக - பாஜக பிரிந்து இருப்பதால் திமுக அணிக்கு களத்தில் போட்டியே இல்லை. 4- 5 தொகுதிகளில் கொஞ்சம் போட்டி இருக்கும். கோவை, தருமபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5-6 தொகுதிகளில் போட்டி இருக்கிறது. மற்றபடி போட்டி இல்லை, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications