தமிழிசை வெற்றி பெறுவது சந்தேகம் தான்... முதலமைச்சர் நாராயணசாமி ஆரூடம்
சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசின் அனுமதியில்லாமல் மேல்முறையீடு செய்ய முடியாது என்ற அவர், அதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்காது என்று தெரிவித்தார்.

கிரண்பேடி சொந்தப் பெயரில் சொந்தச் செலவில் மட்டும் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
ஜிஎஸ்டியை கொண்டு வந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் கூறிய நாராயணசாமி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?












Click it and Unblock the Notifications