Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நிறைவடைந்திருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அடுத்த கட்டமாக தங்கள் கட்சியினை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்..

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்து இருக்கிறது. அதை தொடர்ந்து தேர்தலின் போது தாங்கள் சந்தித்த சிக்கல்கள் பிரச்சினைகள் குறித்து அரசியல் தலைவர்கள் தீவிரமாக அலசி ஆராய்ந்து அதனை தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

It is reported that soon there will be major changes in the Tamil Nadu Congress Committee

அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து மண்டல மாவட்ட செயலாளர் உடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு மற்ற செயலாளருடன் பேச்சு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கமிட்டி: தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவும் இதே போன்றதொரு பிரச்சனையை எதிர்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கமிட்டியில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை திடீரென நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன்னதாகவே பல்வேறு தலைவர்களும் கேஎஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி தூக்கியதோடு தாங்கள் தலைவர் பதவியை பெற வேண்டும் என டெல்லி தலைமையிடம் காய்களை நகர்த்தி வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார்.

ஏமாற்றம்: அதற்கு முன்னதாக ஜோதிமணி , கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரது பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதும் செயல்பாடுகளின் அடிப்படையில் செல்வப்பெருந்தகை தலைமையின் நன்மதிப்பை பெற்று தலைவர் பதவியும் கைப்பற்றி விட்டார். இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் கட்சியில் பெரிய குழப்பம் எழும்பியது. கடைசி வரை சில தொகுதிகளில் வேட்பாளர் பெயர்களை இழுத்தடித்து அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சில வேட்பாளர்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு தாங்கள் போட்டியிடுவதை உறுதி செய்து கொண்டனர்.

செல்வப்பெருந்தகை: அந்த வகையில் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் டெல்லியில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் போட்டியிட்டனர். ஆனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது என காங்கிரஸ் கட்சியினரே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனக்கும் சீட்டு கிடைத்துவிடும் என எதிர்பார்த்து காத்திருந்தார் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் திருச்சி மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்பியுமான திருநாவுக்கரசர். ஆனால் மற்றவர்களுக்கு சீட்டு கிடைத்த நிலையில் அவருக்கு எதிர்பாராத விதமாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.

திருநாவுக்கரசர்: இதனால் அவர் பாஜக அதிமுகவில் இணையலாம் என பேசப்பட்டது. இது குறித்த கேள்விகளுக்கும் காட்டமாக பதில் அளித்தார் திருநாவுக்கரசர். ஆனால் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என்கின்றனர் திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள். செல்வப்பெருந்தகைக்கும் திருநாவுக்கரசிற்கும் இடையே மோதல் பல ஆண்டு காலமாகவே நிலவி வருவதாகவும் அதன் காரணமாகத்தான் தற்போது அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் செல்வப்பெருந்தகை தான் இருக்கிறார் என கூறுகின்றனர் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள்.

உட்கட்சி மோதல்: மேலும் திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது பல்வேறு நிர்வாகிகளை தனது ஆதரவாளர்களாக பல மாவட்டங்களில் நியமனம் செய்திருந்தார். அந்த வகையில் திருச்சியில் 80 சதவீதம் பேர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் தான் என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் மாவட்ட நகர ஒன்றிய அளவில் இருக்கிறார்கள். இதனால் கட்சியில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இருந்த போதும் முன்னதாக தலைவராக இருந்த கேஎஸ் அழகிரி அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை.

மோதல் உச்சம்: அதே நேரத்தில் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு அந்த மோதல் உச்சம் பெற்றிருக்கிறது. திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் பகுதிகளில் செல்வப்பெருந்தகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. போஸ்டரில் அவரது புகைப்படத்தை புறக்கணிப்பது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தால் பங்கேற்காமல் இருப்பது என பல பிரச்சனைகள் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கேஎஸ் அழகிரியின் ஆதரவாளர்களும் செல்வப்பெருந்தகைக்கு எதிராக கிளம்பியிருக்கிறார்கள்.

நிர்வாகிகள் மாற்றம்: அதுமட்டுமல்லாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களும், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் மறைமுக எதிர்ப்பை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் ஆதரவாளர்கள் இருக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை செல்வப்பெருந்தகை தரப்பு தயாரித்து வைத்துள்ளதாகவும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னதாகவோ அல்லது முடிவடைந்த பின்னரோ புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலும் அதற்குப் பிறகு நகர ஒன்றிய நிர்வாகிகளில் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி தலைமை: இந்த தகவல் எதிர் தரப்புக்கு தெரிய வர டெல்லி தலைமையிடம் புகார் சொல்லியுள்ளனர். தேசிய அளவில் தேர்தல் இருப்பதால் தற்போதைக்கு யாருக்கும் அப்பாயின்ட்மெண்ட் தரவில்லையாம் காங்கிரஸ் தலைமை. புதிய தலைவர் நியமனத்திற்கு பின்னும் காங்கிரஸில் மோதல் வலுவடைந்து இருப்பதாகவே கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+