பாலியல் இரை..பச்சை குழந்தைகள்! கண்டுபிடித்தது NIA..கருக்கா வினோத்துக்கும் கனெக்சன்? யார் இந்த நதியா?
சென்னை: சென்னையில் 12ஆம் வகுப்பு மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கர் கும்பல் சிக்கியுள்ள நிலையில், இந்த விவாகரத்தை கண்டுபிடித்தது என்ஐஏ எனவும், கருக்கா வினோத் வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை நடத்த சென்ற போது நதியா சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 70 வயது முதியவர் உள்ளிட்ட 7 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக சென்னை சிசிபி இன்ஸ்பெக்டர் செல்வராணி குழுவினர் இது தொடர்பான விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்வது தெரிய வந்தது.
பாலியல் தொழில்: இதையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர் சிசிபி போலீசார். அப்போது சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 75 வயது முதியவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் மற்றொரு பகுதியில் வசிக்கும் பெண் புரோக்கரான நதியா என்பவரையும் அவரது தங்கையையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போதுதான் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பணத்தாசை காட்டி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பல முக்கிய புள்ளிகளுக்கு இரையாக்கியது தெரிய வந்தது.
பெண் புரோக்கர் கைது: கைதான பெண் புரோக்கரின் மகள் ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவரை பாலியல் தொழில் தள்ளியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமி உடன்படிக்கும் மற்ற மாணவிகளையும் தனியே வசிக்கும் பெண்களின் குழந்தைகளையும் குறிவைத்து இந்த பாலியல் கும்பல் பாலியல் தொழிலில் தள்ளியது தெரிய வந்தையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் கைது: இதற்கிடையே சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வாடிக்கையாளர்கள் யார்? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் குறித்த விசாரணையின் போது இந்த வழக்கு என்ஐஏ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள்: ஆளுநர் மாளிகை முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய வழக்குக்கு முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? என ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பிறகு என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தற்போது பாலியல் வழக்கில் சிக்கி இருக்கும் நதியா என்பவர் தான் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தார் என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கருக்கா வினோத்: இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் இருக்கும் நதியாவின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. ஐந்து செல்போன்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அதில் சிறுமிகளின் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்தது. மேலும் பாலியல் தொழிலில் லோக்கல் ரவுடிகள் பிரச்சனை செய்யும் போது அதில் கருக்கா வினோத் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததும் தெரிய வந்தது.
நடவடிக்கை எப்போது?: இதனையடுத்தே இந்த விவாகரம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழக காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்தே அதிகாரிகள் நடத்திய சோதனையில் வாடிக்கையாளர்களும், புரோக்கர் உள்ளிட்ட கும்பலும் சிக்கியுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் மேலும் விசாரணையை போலீசார் துரிதப்படுத்த வேண்டும் எனவும், வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் சிறுமிகளை சீரழித்த கும்பலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications