ஐடி ரெய்டு.. டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் கணக்கில் வராத ரூ. 2.1 கோடி ரொக்கம் பறிமுதல்?
சென்னை: ஈரோட்டை சேர்ந்த டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் கணக்கில் வராத ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2-வது நாளாக அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதர் அசோக், மற்றும் அவரது நண்பர் என தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

இன்று காலை 2-வது நாளாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. விடிய விடிய நடைபெற்ற ஐடி சோதனை இன்றும் தொடர்ந்து வருகிறது. டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் சசிதானந்தம் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து ரூ. 2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2-வது நாளாக சோதனை நடைபெறும் நிலையில், கணக்கில் வராத ரூ 2.1 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications