சாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்?
ஆசிரமங்களில் நடக்க போகும் ஐடி ரெய்டுகள் இனி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Recommended Video
சென்னை: கல்கி சாமியாரைத் தொடர்ந்து மேலும் சில சாமியார்களுக்கு குறி வைக்கப்பட்டிருப்பதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். வரலாறு காணாத அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதால் இவர்களையும் அள்ள வருமான வரித்துறை திட்டமிட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.
கல்கி பகவான் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சாமியார். இவரை ஒரு காலத்தில் தீவிரமாக பின் தொடர்ந்தவர்கள் பலர். பல்துறைப் பிரபலங்களும் இவர் பின்னால் அணிவகுத்தனர்.
ஆனால் அவரது ஆசிரமத்தில் ஏகப்பட்ட மோசடிகள், மோசமான வேலைகள் நடப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து கல்கி சிக்கலில் மாட்டினார்.

கல்கி ஆசிரமம்
அதன் பிறகு பல வருடம் அவரைப் பற்றிய தகவலே இல்லை. அமைதியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் இப்போது கல்கி ஆசிரமத்தை பிரித்து மேய்ந்து கொண்டுள்ளனர் வருமான வரித்துறையினர். 500 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

ரியல் எஸ்டேட்
கல்கி ஆசிரமம் பெயருக்குத்தான் ஆசிரமம் என்று உள்ளது. ஆனால் உண்மையில் ரியல் எஸ்டேட்தான் மிகப் பெரிய அளவில் தொழிலாக செய்து வந்துள்ளனர் கல்கி குடும்பத்தினர். அப்பாவி பக்தர்கள் கொண்டு வந்து கொட்டும் பணத்தையெல்லாம் எடுத்து தங்களது தொழிலை அபிவிருத்தி செய்துள்ளனர். ஊர் ஊராக நிலங்களை வாங்கி விற்று தொழில் செய்துள்ளனர்.

தப்பி ஓட்டம்?
மிகப் பெரிய அளவில் சொத்துக்கள் குவிந்ததால் வெளிநாட்டில் செட்டிலாகும் திட்டமும் இவர்களிடம் இருந்துள்ளது. கல்கி பகவானும், அவரது மனைவியும் கூட கடந்த 2 வருடமாக ஊரிலேயே இல்லையாம். வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக ஒரு தகவல் உள்ளது. என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. ஆனால், மிகப் பெரிய மோசடிக் கூட்டமாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.

ஆசிரமங்கள்
இதற்கிடையே, தமிழகத்திலும் சில ஆசிரமங்கள், சாமியார்கள் மீது வருமான வரித்துறையின் கண் பார்வை விழுந்துள்ளதாம். குறிப்பாக பாஜகவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வோரின் பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாம்.

பாஜக அரசு
அடுத்தடுத்து இவர்களுக்கு ஆப்பு வைக்கப்படுமாம். இவர்களால் பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறதாம். தமிழகத்தில் அடுத்தடுத்து வருமான வரித்துறை ரெய்டுகள் மீண்டும் படையெடுக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications