சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி?
சென்னை: சென்னையில் தேர்தல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மகன்களுக்கு தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆதரித்து வெற்றி பெறும் வகையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க திட்டமிடப்பட்டதாக புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார்கள் தேர்தல் பறக்கும் படையினருக்கும் வருமான வரித் துறைக்கும் சென்றதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சென்னை மயிலாப்பூர் பகுதியில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் முதலில் சோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர் சேகர் பாபு
இந்த நிறுவனம் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
ஐடி சோதனை
அதனைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டன. வடபழனி, கீழ்ப்பாக்கம், அடையாறு மற்றும் ஏழுகிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 5 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய பாதுகாப்பு படையினரும் களமிறக்கப்பட்டிருந்தனர்.
முக்கிய ஆவணங்கள்
சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த ஆவணங்கள் என்ன தொடர்புடையவை, அதில் என்ன தகவல்கள் உள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. சோதனை முடிந்த பின்பே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைமை
தேர்தல் நேரத்தில் திமுக தலைமைக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் ஐடி சோதனை நடைபெற்றதால் அரசியல் வட்டாரங்களில் கூடுதல் பரபரப்பு பெற்றுள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் பதுக்கி வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்ததாக கூறப்படுவதால் மேலும் சில திமுக சீனியர் அமைச்சர்கள், வேட்பாளர்களை குறி வைத்து அடுத்தடுத்து சோதனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகள்
அதே நேரத்தில் தேர்தலின் போது இது போன்ற சோதனைகள் எதிர்பார்க்கப்பட்டது தான் என்கின்ற திமுகவினர். ஆரம்பத்தில் இருந்து திமுக முக்கிய புள்ளிகளை குறி வைத்து அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தின. தேர்தல் நேரத்தில் அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் நிச்சயம் அமலாக்கத்துறை வருமானவரித்துறை ரெய்டு நடவடிக்கைகளை நாங்கள் எதிர்பார்த்தே இருந்தோம்.. எனவும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அடித்துச் செல்கின்றனர் திமுகவினர்.
வருமானவரி சோதனை
இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு அவர்களின் மகன்களின் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications