'நிம்மதி அளிக்கிறது..' தமிழகத்தில் 12ஆவது நாளாக குறைந்த கொரோனா..முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது நிம்மதி தருவதாகக் கூறியுள்ள முன்னாள் சாகாதார் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதிகபட்சமாகத் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.

தமிழ்நாடு கொரோனா பாதிப்பு
அதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த மே 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும், ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. 12ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்து மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தது. நேற்று மாநிலத்தில் 25317 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது நிம்மதி அளிப்பதாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விராலிமலை எம்எல்ஏவான விஜயபாஸ்கர் இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அங்குச் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

நிம்மதி தருகிறது
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வருவது நிம்மதி அளிக்கிறது. அதேநேரம் மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெற்று உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்
ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்தோம். இப்போது முதல்வரும் மீண்டும் அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுதான் இப்போது தமிழ்நாட்டிலுள்ள அனைவரது விருப்பமாக உள்ளது. மத்திய சுகாதாரத் துறை செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தில் விரைவாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications