Zoom Call வந்தாலே.. பதறி ஓடும் ஐடி ஊழியர்கள்.. ஐடி துறையே கதிகலங்கி நிற்கிறது.. என்னங்க நடக்குது?
சென்னை: ஒரு காலத்தில் ஊழியர்கள் மீட்டிங் நடத்தும்.. ஊழியர்கள் எளிதாக ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வசதியாக இருந்த Zoom செயலி இப்போது ஐடி ஊழியர்களுக்கு ஒரு ஷாக் தளமாக மாறிவிட்டது. Zoom Call வந்தாலே இரும்பொறை அரசனின் கொலைகார லாரியை பார்த்தது போல ஐடி ஊழியர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்திய ஐடி ஊழியர்கள் பலரும் Zoom Call வழியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட அனுபவம் குறித்து ஓர் இந்திய ஊழியர் ரெடிட்டில் பகிர்ந்துள்ள பதிவு, இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால், அவர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

வழக்கம் போல் வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த அந்த ஊழியர், அக்டோபர் 25 அன்று காலை 8:30 மணிக்கு எழுந்து, 9 மணிக்கு லாக் இன் செய்துள்ளார். அப்போது அவருக்கு காலை 11 மணிக்கு ஒரு கட்டாயக் zoom Call மீட்டிங்கிற்கான அழைப்பு வந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் CEO-வுடன் நடத்தப்படும் கூட்டம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி zoom call
கூட்டம் தொடங்கியதும், CEO இணைந்து, அனைவரின் கேமரா மற்றும் மைக்குகளை அணைத்துவிட்டு, பெரும்பாலான இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ஊழியர்களின் செயல்திறனுடன் தொடர்புடையது அல்ல, மாறாக நிறுவன மறுசீரமைப்பு காரணமாக எடுக்கப்பட்டதாக CEO விளக்கினார். நீங்கள் நன்றாகவே வேலை செய்கிறீர்கள். கவலைப்பட வேண்டாம்.. நாங்கள் நிறுவனத்தில் நிறைய மாற்றுகிறோம். அதனால் இந்த பணிநீக்கம் செய்துள்ளோம் என்று கூறி உள்ளார்.
ஐடி துறை பணிநீக்கம் - IT sector recession
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று தெரிவித்த CEO, எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார். இந்தத் திடீர் முடிவு தன்னை உலுக்கிவிட்டதாக அந்த ஊழியர் குறிப்பிட்டுள்ளார். எந்த முன் அறிவிப்பும் இல்லை, மனதளவில் தயாராவதற்கு நேரமும் இல்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், "அக்டோபர் மாதச் சம்பளம் மாத இறுதியில் வழங்கப்படும் என்றும், பயன்படுத்தப்படாத விடுமுறைகள் பணமாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இவை எதுவும் நான் இப்போது உணரும் வலியை ஈடுசெய்யாது. இது நான் முதல் முறையாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அனுபவம், அது மிகவும் மோசமாக உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
மாதம் சுமார் $1,000 (தோராயமாக ₹88,760) வருமானம் ஈட்டி வந்தவருக்கு, இந்தத் திடீர் இழப்பு ஒரு பெரிய நிதி நெருக்கடியாகும். இந்தச் சூழ்நிலையில், ரெடிட் பதிவு விரைவாக வைரலானது.
சமூக வலைத்தளங்களில் பலரும் அந்த ஊழியருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏராளமானோர் ஊக்கமளிக்கும் கருத்துக்களையும், வேலை வாய்ப்புகளையும் பகிர்ந்துள்ளனர். ஒருவர், "இதை கேட்டு வருந்துகிறேன். நீங்கள் ஐடி துறையைச் சேர்ந்தவர் என்று பார்த்தேன். நிதி துறை சார்ந்த சர்வீஸ் வேளைகளில் ஆர்வம் இருந்தால், நான் உங்களைப் பரிந்துரைக்க முடியும். இது பெரிய உதவியாக இருக்காவிட்டாலும், பயனுள்ளதாக இருக்கும்" என்று கருத்து தெரிவித்தார்.
மற்றொரு பயனர், "இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் மதிக்கப்படும் மற்றும் கௌரவிக்கப்படும் ஒரு பணியிடத்திற்குத் தகுதியானவர். விரைவில் சிறந்த ஒரு வேலையை பெறுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications