வருமான வரி தாக்கல் கடைசி தேதி செப். 30 வரை நீட்டிப்பு? தீயாக பரவும் தகவல்.. மத்திய அரசு திடீர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று கடைசி நாளாகும். இதற்கிடையே வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் காலம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே நிதியமைச்சகம் இது தொடர்பாக முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

சம்பளதாரர்கள், தொழில் செய்வோர் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்கிறார்கள். உங்கள் வருமானம் மத்திய அரசு அறிவித்த வருமான வரி உச்சவரம்பைத் தாண்டி இருந்தால் நீங்கள் நிச்சயம் வருமான வரி செலுத்தி ஐடிஆர் தாக்கல் செய்ய வண்டும். இந்தாண்டு வருமான வரி தாக்கல் செய்ய இன்று செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ITR Filing Deadline Not Extended Income Tax Dept Clarifies Amid Fake Social Media Messages

கடைசி தேதி நீடிப்பு?

இருப்பினும், கடந்த சில நாட்களாகவே வருமான வரி இணையத்தளத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவ்வப்போது வருமான வரி இணையத்தளம் லோட் ஆகாமல் இருந்தது. இதனால் வருமான வரி தாக்கல் செய்வோர் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். இந்தச் சூழலில் தான் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியது. அதாவது வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம் என நிதியமைச்சகம் அறிவித்தாக தகவல் பரவியது.

கடந்த காலங்களில் இதுபோல ஐடிஆர் தாக்கல் செய்யும் தேதியை மத்திய அரசு நீடித்து இருப்பதால் இது உண்மை என்றே பொதுமக்கள் பலரும் கருதினர். இந்த மெசேஜ்ஜை பலரும் தங்கள் தெரிந்த பல க்ரூப்களில் பகிர ஆரம்பித்தனர். இதனால் பொதுமக்கள் பலரும் இது உண்மை என்றே நினைத்தனர். இதற்கிடையே மத்திய நிதியமைச்சகம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.

நிதியமைச்சகம் விளக்கம்

வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவலை நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. செப்டம்பர் 15க்கு மேல் நீடிப்பதாக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளது. எனவே, இதுபோல இணையத்தில் பரவும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீடிப்பு இல்லை

இது தொடர்பாக வருமான வரித் துறை வெளியிட்ட அறிக்கையில், "ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஒரு போலி செய்தி பரவி வருகிறது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 தான். போலி செய்திகளை நம்ப வேண்டாம். வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி?

  • வருமான வரி இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்யும் பிராசஸை முடிக்கலாம். உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் லாகின் செய்யுங்கள்.
  • அதில் "File Income Tax Return" என்ற பிரிவுக்கு செல்லுங்கள். அதில் 2025-26 ஆண்டு என்பதைத் தேர்வு செய்யவும். அங்கு individual, HUF என பல ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உங்களுக்கு எந்த ஆப்ஷன் பொருந்துமோ தேர்வு செய்யவும்.
  • அடுத்து வருமானம் குறித்த தகவல்களை பதிவிடவும். ஏற்கனவே இதில் இருக்கும் சம்பளம், டிடிஎஸ், வங்கி வட்டி உள்ளிட்ட தகவல்களைச் சரிபார்க்கவும்.
  • பிறகு ITR படிவத்தை (ITR-1 முதல் ITR-4) தேர்வு செய்ய வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் செக் செய்து உறுதிப்படுத்தி, நிலுவையில் உள்ள வரிகளைச் செலுத்தவும்.
  • பிறகு ஆன்லைனிலையே வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யவும்.
  • அடுத்த 30 நாட்களுக்குள் ஆதார் OTP உள்ளிட்ட ஆப்ஷன்கள் மூலம் இ-வெரிபை செய்ய வேண்டும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+