Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடிஆர் ரீஃபண்ட் வார்னிங்.. வருமான வரி கட்டுவோர் டிசம்பர் 31-க்குள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்து கொண்டிருக்கிறது: "உங்கள் ITR ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (On Hold). ஒரு வாரத்திற்குள் திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்யுங்கள்." என்று அந்த மெயில் வந்திருக்கிறது. இதுபற்றி பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட தகவலை சற்று விரிவாக பார்ப்போம்.

கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்து கொண்டிருக்கிறது: "உங்கள் ITR ரீஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (On Hold). ஒரு வாரத்திற்குள் திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்யுங்கள்." என்று அந்த மெயில் வந்திருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், வருமான வரித்துறை இந்தச் சிக்கலைக் கண்டறிய 4 மாதங்கள் எடுத்துக் கொண்டது. ஆனால், அதைச் சரிசெய்ய நமக்குக் கொடுத்திருப்பதோ இன்னும் சில நாட்களே உள்ளது.

income tax ITR

விரிவான இமெயில் ஏன் வரவில்லை?

பலருக்குத் தபால் மூலமோ அல்லது இ-மெயில் மூலமோ விரிவான விளக்கம் வராதது ஏன் என்று கேள்வி எழலாம். ஏனெனில், இவை கணினியால் தானாகவே கண்டறியப்படும் 'ரிஸ்க் மேனேஜ்மென்ட்' எச்சரிக்கைகள் ஆகும்

உங்கள் பழைய இ-மெயில் முகவரிக்கு அந்தத் தகவல் சென்றிருக்கலாம்.

ஸ்பேம் (Spam) ஃபோல்டரில் விழுந்திருக்கலாம்.

அல்லது வெறும் SMS மற்றும் போர்ட்டலில் மட்டுமே அலர்ட் வந்திருக்கலாம்.

எனவே, உடனே ITR Portal → e-Proceedings / Worklist பகுதிக்குச் சென்று செக் செய்ய வேண்டும்.

ITR Processing on Hold என்றால் என்ன?

ITR Processing on Hold என்று வந்ததை கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. இது உங்களுக்கு வந்த நோட்டீஸ் கிடையாது. இதன் பொருள் என்னவென்றால்: உங்களுடைய ரீஃபண்ட் கோரிக்கை, வருமான வரித்துறையிடம் உள்ள தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், ரீஃபண்ட் கொடுப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு சுய-திருத்த வாய்ப்பை வழங்குகிறார்கள்.

ரீஃபண்ட் ஏன் சிக்கலில் விழுகிறது? (முக்கிய காரணங்கள்):

TDS/TCS குளறுபடி: நீங்கள் காட்டியுள்ள TDS தொகையும், உங்களது 26AS படிவத்தில் உள்ள தொகையும் ஒன்றாக இல்லை.

AIS தகவல்களுடன் முரண்பாடு: வட்டி, டிவிடெண்ட் அல்லது சம்பளம் AIS-ல் தெரிகிறது, ஆனால் நீங்கள் ITR-ல் அதைச் சரியாகக் காட்டவில்லை.

திடீர் ரீஃபண்ட் உயர்வு: கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு திடீரென ரீஃபண்ட் தொகை அதிகமாக இருந்தால் சிஸ்டம் அதைச் சோதிக்கும்.

ஆதாரமற்ற வரி விலக்குகள்: HRA, 80C, 80D போன்ற வரி விலக்குகளை உரிய ஆதாரங்கள் இன்றி அதிகமாகக் காட்டியிருப்பது.

அதிகப்படியான திருத்தங்கள்: அடிக்கடி 'Revised Return' தாக்கல் செய்திருந்தால் சிஸ்டம் உங்களைக் கண்காணிக்கும்.

நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன?

உடனே வருமான வரி போர்ட்டலில் லாக்-இன் (Login) செய்யுங்கள்.

உங்கள் ITR படிவத்தை, AIS மற்றும் 26AS படிவங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

தவறு இருந்தால்: உடனே 31-12-2025-க்குள் திருத்தப்பட்ட (Revised) படிவத்தைத் தாக்கல் செய்யுங்கள்.

தகவல்கள் சரியாக இருந்தால்: கவலைப்பட வேண்டாம், சரிபார்ப்புக்குப் பிறகு தானாகவே ரீஃபண்ட் வந்துவிடும்.

மறக்காதீர்கள்: ஜனவரி 1, 2026-க்குப் பிறகு நீங்கள் படிவத்தைத் திருத்தினால், அதற்கு அபராதம் மற்றும் கூடுதல் வரி கட்ட வேண்டியிருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+