செந்தில் பாலாஜி பக்கம் வீசும் காற்று.. இது முதல் வெற்றி.. வழக்கில் வெல்வார்: RS பாரதி சொன்ன தகவல்!
சென்னை: செந்தில் பாலாஜிக்கு சாதகமான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில், "இது முதல் வெற்றி, செந்தில் பாலாஜி இந்த வழக்கில் வெற்றி பெறுவார்" என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு எனது அமைச்சரவையை தன்னிச்சையாக மாற்ற அதிகாரம் இல்லை என்றார். இதையடுத்து, ஆளுநர் தனது உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில், எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர் எம்.எல்.ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, உஜ்ஜல்புயல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை என கூறி அவரை அமைச்சரவையில் நீக்கக் கோரிய மனுவை ரத்து செய்தனர். ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பேசுகையில், "அமைச்சரை நீக்கவும், நியமிக்கவும் முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபடுவதற்கு குட்டு வைப்பதை போல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இது முதல் வெற்றி. இறுதியில் இந்த வழக்கில் செந்தில்பாலாஜி வெற்றி பெறுவார்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பு சரிபார்த்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜிக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?












Click it and Unblock the Notifications