விஜய்க்கு ஆதரவுன்னு சொன்ன கம்யூனிஸ்ட் கட்சிகள்.. உடனே ஸ்டாலினை சந்திக்க சென்ற காதர் மொகிதீன்
சென்னை: சிபிஐ, சிபிஎம் என அடுத்தடுத்து கம்யூனிஸ்டு கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளித்த நிலையில், உடனடியாக தங்களது நிலைப்பாட்ட தெரிவிக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கே. எம். காதர் மொகிதீன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தவெகவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று கூறியிருந்த காதர் மொகிதீன் ஸ்டாலினை சந்திக்க சென்றிருப்பது தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்த பிறகே விஜய்க்கு ஆதரவு அளிப்பாரா இல்லை ஆதரவு அளிக்கமாட்டாரா என்பதும் தெரியும் என சொல்லப்படுகிறது.
இதனால் இன்னும் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் உள்ளதாகவே கூறப்படுகிறது. முன்னதாக ஆதரவு வழங்காததால் தான் விஜய்யும் காதர் மொகிதீனை சந்திக்காமல் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இன்று கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் (2) என ஆதரவு தெரிவித்ததால் விஜய்யின் தவெகவுக்கு காங்கிரஸ்(5) கட்சியோடு சேர்த்து 116 ஆக உயர்ந்தது. ஆனால் பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் தேவை.
இதனால் விசிகவினருடன் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை விஜய்க்கு எந்த ஒரு ஆதரவு கடிதமும் அளிக்கவில்லை. மாறாக துணை முதல்வர் பதவி மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து தான் எதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும் விஜய் தவெகவினர் பேச்சுவார்த்தையை இன்று மாலையில் தொடங்கினர். நேற்றே அவர் ஸ்டாலினுக்கு தான் ஆதரவு விஜய்க்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என உறுதிபட கூறியிருந்தனர். ஆனால் விசிக இப்படி நிபந்தனை விதித்ததால் காதர் மொகிதீனிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இதன்பின்னர் விசிக (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(2) விஜய்க்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகின. விஜய்யும் ஆளுநரை இன்று மாலை 3 வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். ஆனால் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு கொடுத்ததா என வெளிப்படையாக தெரியவில்லை. இதனால் தவெகவின் பலம் 116 என்பதே உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தற்போது உறுதிப்படுத்தும் விதமாகவே ஆளுநரும் விஜய்யை இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீனும் ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி அதன்பிறகே முடிவினை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் விஜய்க்கு ஆதரவு அளிப்பாரா இல்லை ஆதரவு அளிக்கமாட்டாரா என்பதும் இதற்கு பிறகே தெரியும் என சொல்லப்படுகிறது. இதனால் இன்னும் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் உள்ளதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications