திடீரென சரிந்த காதர் மொகிதீன்.. பேசும்போதே திடீர் மயக்கம்.. அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு
சென்னை: திமுக உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்காக ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தார். அப்போது முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொகிதீன் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக இன்றைய தினம் ஐயூஎம்எல் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்றிருந்தார். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, வெளியே வந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அண்ணா அறிவாலயத்திலேயே ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது கட்சி நிர்வாகிகள் அவரை அண்ணா அறிவாலயம் உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
காதர் மொகிதீன் நலமுடன் இருப்பதாக நிர்வாகிகள் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கிருந்த திமுக நிர்வாகிகளும் காதர் மொகிதீனை சந்தித்து நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications