ஈகோ பார்க்காத முஸ்லீம் லீக் தேசியத்தலைவர் காதர் மொகிதீன்! திமுகவுடன் நேரடியாக தொகுதி பங்கீடு பேச்சு!
சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவரான காதர் மொகிதீன் நேரடியாக களமிறங்கியிருக்கிறார்.
மாநில கட்சிகளே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அவர்களை தான் அனுப்பி வைக்கிறது. மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் கூட அக்கட்சியின் தலைவர்கள் யாரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் இல்லை. ஆனால் தேசியக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் தேசியத் தலைவர் பதவி வகிக்கும் காதர் மொகிதீன் எந்த ஈகோவும் பார்க்காமல் தாமே நேரடியாக களமிறங்குகிறார்.

சென்னையில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். நிர்வாக குழு கூட்டத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;
தீர்மானம் 01. - முதலமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டு:
சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கல்வி நிறுவனங்களுக்கான சிறுபான்மை அந்தஸ்தை, நிரந்தரமாக வழங்கிடும் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கும், சிறுபான்மையினருக்கான அடக்கஸ்தலங்கள் இல்லாத பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலத்தை, அடக்கஸ்தலங்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கும் மற்றும், நீண்ட நாள் முஸ்லிம் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில், விடுதலை செய்வதற்கு, திமுக ஆட்சி அமைந்தவுடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையிலான ஆணையத்தை உருவாக்கி அதன் அடிப்படையில், அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநருக்கு அனுப்பி, பல்லாண்டு காலமாக சிறையில் வாடிய, முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்திட சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், இதயம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது.
தீர்மானம் 02 - பாஜக அரசுக்கு கண்டனம்:
கடந்த 1991ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம், நடைமுறையில் இருக்கும் நிலையிலேயே, இந்திய அரசிலமைப்புச் சட்டம், வழங்கி இருக்கக் கூடிய, அனைத்து சமூகங்களின் கலாச்சாரம், தனித்தன்மை, மத வழிப்பாட்டு உரிமைகளை பறிக்கக் கூடிய வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மஸ்ஜித் வளாகத்தில் அகழ் ஆய்வுகளை நடத்தி, இந்துக்கள் பூஜை நடத்துவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஒன்றிய பாஜக அரசுக்கு இக்கூட்டம், கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, மதசார்ப்பற்ற கட்சிகள், ஒன்றிணைந்து சிறுபான்மையினரின் உரிமைகள், இந்திய திருநாட்டில், பாதுகாக்கப்பட துணை நிற்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 03 - பொது சிவில் சட்டத்திற்கு கண்டனம்:
இந்திய அரசிலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளின்படி, நாட்டில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களும், அவரவரின் கலாச்சரம், தனிச்சட்டங்கள், மொழி உரிமைகள், வழிப்பாட்டு உரிமைகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை உருவாக்கி மதசார்பற்ற கொள்கையின்படி வாழ்ந்து வருகிறார்கள். பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்று கடந்த 10 ஆண்டுகளில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கக் கூடிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஒன்றன் பின் ஒன்றாக ஈடுபட்டு, தற்போது, பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அவசரக் கோலத்தில், பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 04 - பிரதமர் மோடிக்கு கண்டனம்:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தனியார் டிரஸ்ட் மூலம் கட்டி எழுப்பப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவினை, மதச்சார்பற்ற இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தியிருப்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், அற விழுமியங்களுக்கும் எதிரான நடவடிக்கை ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின் பெயரால் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பெரும்பான்மைவாத போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 05 - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குழு:
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து, திமுக குழுவிடம், பேச்சுவார்த்தை நடத்த, இ.யூ.முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை குழுவில், கீழ்க்கண்ட 5 பேர் நியமனம் செய்து இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
1. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய தலைவர்
2. கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் (முன்னாள் எம்.எல்.ஏ), மாநில பொதுச் செயலாளர்.
3. எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில பொருளாளர்
4. எச்.அப்துல் பாஸித்,Ex.MLA., தேசிய செயலாளர்,
5. ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications